புதுடில்லி, மார்ச் 31- தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு மேற் கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி நாடாளுமன்ற மக் களவையில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் அ. கணேசமூர்த்தி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து தனது பதிலில் ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் குறிப்பிட்டதாவது:
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது பற்றிய செய்திகள் வரும்போ தெல்லாம், ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் ராஜாங்க நடைமுறை களை மேற்கொள்வதன் மூலம் இந்த விஷயத்தின் மீது கவனம் செலுத்துகிறது. கடைசியாக 27.2.2023 அன்று இந்திய மீனவர் கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதுடன், 13.3.2023 அன்று இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
2020 செப்டம்பர் மாதம் அப் போதைய இலங்கை பிரதமருடன் நமது பிரதமர் நடத்திய இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாட்டில் இந் திய மீனவர்கள் தாக்குதல் தொடர் பாக உயர்மட்ட நடவடிக்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஒன்றிய வெளியுறவு அமைச்சர், ஜனவரி 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதிவரை கொழும்பு சென்று, இலங்கை மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து இந்திய மீனவர்கள் தொடர்பான சகல விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி யுள்ளார்.
இந்த விஷயம் குறித்து அவரது வருகையின்போது 2021ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை இலங்கை பிரமுகர்கள் மற்றும் அப்போதைய வெளிவிவகார செயலாளர் ஆகி யோருடன் ஆலோசனை மேற்கொள் ளப்பட்டுள்ளது.
ஒன்றிய வெளிவிவகாரத் துறை அமைச்சர் கடந்த ஜனவரி 15, 2022 அன்று, இலங்கையின் அப்போ தைய நிதியமைச்சருடனான மெய் நிகர் சந்திப்பில், இலங்கை கடற் படையின் காவலில் உள்ள இந்திய மீனவர்களை முன்கூட்டியே விடு தலை செய்வது குறித்து விவா தித்துள்ளார். மேலும், 2022 மார்ச் மாதம் அவர் இலங்கைக்கு வந்த போது இலங்கை மீன்வளத்துறை அமைச்சருடன் இந்த விஷயம் குறித்து ஆலோசனை நடத்தியுள் ளார்.
மேலும், மார்ச் 4, 2023 அன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய வருகையின் போதும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரால் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த நவம்பர் மாதம் 2016ஆம் ஆண்டில் இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள் புதுடில்லியில் சந் தித்து, இருதரப்பு கூட்டுப் பணிக் குழு (யிகீநி) செயல்திட்டம் மூலம் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில் 2022 மார்ச் மாதம் இரண்டு அரசுகளுக்கிடையில் இருதரப்பு கூட்டு பணிக்குழுவின் 5ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மீனவர்கள் தொடர் பான முழு அளவிலான பிரச்சி னைகள் குறித்து விவாதிக்கப்பட் டுள்ளன. அதன் அடிப்படையில், மீனவர்கள் பிரச்சினையை முற்றி லும் மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினையாகக் கருதுமாறு இலங்கை அரசாங்கத் திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. மேலும், எந்தச் சூழ்நிலையி லும் கடும் நடவடிக்கைகளில் ஈடு படாமல் இருக்க இரு தரப்பினரும் உறுதியளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. - இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment