லத்தேரி, மார்ச் 13- 10.3.2023 அன்று வேலூர் மாவட்டத்தை சார்ந்த கழக தோழர்கள் அன்னை மணியம்மையார் பிறந்த ஊரான லத்தேரியில் மணியம்மையார் அவர்கள் படித்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மணியம்மையார் பிறந்த நாளை கொண்டாடினர்
இந்த நிகழ்வில் வே மண்டல தலைவர் வி.சடகோபன் மணியம்மையார் தொண் டறம் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார்.
வேலூர் மாவட்டத் தலைவர் இர.அன்பரசன் மாணவர்கள் பெரியாரை பற்றியும் கல்வி குறித்தும் உரையாற்றினார்.
மண்டல செயலாளர் ந.தேன்மொழி பெண் கல்வியின் அவசியம் குறித்தும் பெண் கல்வி உரிமை சார்ந்தது எனவும் உரையாற்றினார்.
ஒன்றிய கவுன்சிலர் ஜெயா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரு கேசன் உரையாற்றினர்.
உதவி தலைமை ஆசிரியர் குணசேகரன் சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இந்த நிகழ்வின் மிகச்சிறப்பான செய்தி என்னவென்றால் அன்னை மணியம் மையாரின் நெருங்கிய உறவினரும் சுந்தரே சன் மகளுமான ஓய்வு பெற்ற ஆசிரியர் சுலோச்சனா அம்மையார் இந்த நிகழ்ச் சியை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர் அந்த பள்ளிக்கு அன்னை மணியம்மையார் பெயரை சூட்டவேண்டும் என்றும் அந்த பள்ளிக்கு ஒரு அரங்கம் கட்டித் தர வேண்டும் என்றும் இரண்டு கோரிக்கை களை முன் வைத்தார்.திராவிடர் கழகம் அதற்கான முன்னெடுப்புகளை மேற் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.
ஊராட்சி தலைவர் மோகன் ஊராட்சி மன்ற செயலாளர் விசுவநாதன், திமுக இலக்கிய அணி கோபி கலந்து கொண்டார்
திமு.க ஒன்றிய செயலாளர் சீத்தாராமன் கேவிகுப்பம் உரையாற்றினார்.
அன்னை மணியம்மையார் பயின்ற இந்த பள்ளிக்கு ''அன்னை மணியம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி" என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி பகுதி ஊராட்சி மன்ற தலைவரிடம் மாவட்ட தலைவர் இர.அன்பரசன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
இறுதியாக பள்ளி ஆசிரியர் குணசேகரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
மாணவர்கள் ஆர்வத்தோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தோம்.
அங்கே இருந்த ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கும், பெண் ஏன் அடிமை யானாள் புத்தகமும் உண்மை இதழும் வழங்கி மகிழ்ந்தோம்.
No comments:
Post a Comment