வெளிநாடுகளில் இந்தியா குறித்து மோசமாக பேசிய மோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 24, 2023

வெளிநாடுகளில் இந்தியா குறித்து மோசமாக பேசிய மோடி

2015 ஆம் ஆண்டு மே மாதம், தென் கொரியத் தலைநகரான சியோலில் வாழும் புலம்பெயர் இந்தியர்களிடையே ஆற்றிய உரையில், ”கடந்த காலத்தில் (காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்) மக்கள் இந்தியாவில் பிறந்த தற்கு என்ன பாவம் செய்தோமென வருத்தப் பட்டார்கள்'' எனக் கூறினார். அவரது கருத்து எதிர்கட்சிகளிடம் பெரும் கோபத்தை கிளப் பியது. சமூக வலைத் தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம்,  பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்கா நகருக்குச் சென்றபோது, “வங்க தேச பிரதமர் பெண்ணாக இருந்தபோதும் தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாதென அறிவித்ததில் நான் சந்தோஷமடைகிறேன்,” எனப் பேசினார். வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா குறித்த, பாலின பாரபட்சம் நிறைந்த இந்தப் பேச்சால் இந்தியாவின் தரம் பன்னாட்டளவில் குறைத்து விட்டதாகக் கடும் கண்டனங்களை எதிர்கட்சி களிடமிருந்து மோடி சம்பாதித்துக் கொண்டார்.  

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  டொரண்டோ நகரின் ரிகோ கொலிசியத்தில் புலம்பெயர் இந்தியர்களிடையே பேசுகையில் முந்தைய இந்திய அரசாங்கங்களை மோடி கேலி பேசி, “முன்பெல்லாம் (காங்கிரஸ் ஆட்சி யில் இருக்கும்போது) இந்தியாவின் அடை யாளம் என்பது ஊழலாக இருந்தது. நாங்கள் அந்த அடையாளத்தை திறன் கொண்ட இந்தியா என மாற்றியிருக்கிறோம்” என்றார்.

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  சீனா சுற்றுப்பயணத்தில் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பேசும்போது ''முன்பு நீங்கள் இந்தி யராக பிறந்ததற்கு அவமானம் அடைந்தீர்கள். இப்போது எனது நாடு இந்தியா என்பதில் பெருமைப்படுகிறீர்கள்” என்று கூறினார்.

வெளிநாடுகளிலேயே இப்படிப் பேசிய வர்தான் மோடி!

- இவர்கள்தான் ராகுல்காந்தி இந்தியாவை சிறுமைப்படுத்திப் பேசிவிட்டார் என்று துள்ளிக் குதிக்கிறார்கள் - அந்தோ பரிதாபம்!

No comments:

Post a Comment