புதுடில்லி, மார்ச் 21- ஒரு பல்கலையில் படிக்க கிடைத்த 'சீட்' ரத்து செய்த அல்லது வேறு பல்கலைக்கு மாற்றலாகி சென்ற மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய தொகையை திருப்பி அளிப்பதற்காக, 30 கோடி ரூபாயை, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு வசூலித் துள்ளது.
யு.ஜி.சி., தலைவர் எம். ஜகதீஷ் குமார் 19.3.2023 அன்று அளித்த பேட் டியில் கூறியுள்ள தாவது:
சில காரணங்களால் ஒரு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும், அதில் சேராமல் ரத்து செய்த அல்லது வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற்றல் வாங்கிச் சென்ற மாணவர்களுக்கு முந் தைய பல்கலைகள் மற் றும் கல்லூரிகள் வசூ லித்த முழு கட்டணத்தை திரும்பத் தர வேண்டும்.
நடப்புக் கல்வியாண் டில், 2022 அக்., 31 வரை வாங்கிய முழுத் தொகை யையும் மாணவர் களுக்கு செலுத்த உத்தரவிடப்பட் டது. ஆனால், சில கல் லூரிகள், பல்கலைகள், நிகர்நிலைப் பல் கலைகள் இந்தத் தொகையை திருப் பித் தராமல் இருந்தன.
இது தொடர்பாக மாணவர்களிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வந்துள் ளன. சிலர் நீதிமன்றங்களையும் நாடியுள்ளனர்.
இதையடுத்து, கல்லூ ரிகள் மற்றும் பல்கலை களிடமிருந்து அந்தத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையில், யு.ஜி.சி., ஈடு பட்டுள்ளது. புது டில்லி பல் கலைக்கழகம் இந்த வகையில் மற்ற பல்கலை.களுக்கு முன்னு தாரணமாக விளங்குகி றது. அந்தப் பல்கலை, 13 ஆயிரத்து 611 மாணவர் களுக்கு, 16.95 கோடி ரூபாய் கட்டணத்தை திருப்பி தந்துள்ளது.
இதைத் தவிர, மற்ற பல்கலைகளிடம் இருந்து, 12.14 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு, 832 மாணவர்களுக்கு திருப்பி தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment