இஸ்லாமாபாத்,மார்ச்9- ஆப்கானிஸ்தானை தலி பான்கள் கைப்பற்றியதிலிருந்து, அந்நாட்டுப் பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிக அடக்கு முறைக்கு உள்படுத்தப்படுவதாக அய்க்கிய நாடுகள் சபை தெரிவித்தது.
பன்னாட்டு மகளிர் நாளை (8.3.2023) முன்னிட்டு அய்.நா வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 2021இல் ஆப்கானிஸ் தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அந்நாட் டிலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் உலகை பரபரப் பான சூழலுக்குத் தள்ளி வரு கிறது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு கொடுக் கப்பட்ட சுதந்திரம் என்பது சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள புதிய ஆட்சியாளர்கள் பெரும் பாலான பெண்களை அடக்கி ஆள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். பெண்களுக்கு பல விதிமுறைகளும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் தடை விதிக்கும்படியான நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. பெண்கள் மேற்கல்வி கற்கவும், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற பொது இடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலை யில், தேசிய மற்றும் பன்னாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியவும் தடை விதிக் கப்பட்டுள்ளது. தலை முதல் கால் வரை பெண்கள் தங்களை மறைத்துக்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தலிபான்களின் கீழ் உள்ள ஆப்கானிஸ்தான் - பெண்களின் உரிமைகள் தொடர்பாக உலகின் மிகவும் அடக்குமுறை நாடாக உள்ளது என்று அய்.நா பொதுச் செயலாளரின் சிறப்பு பிரதிநிதியும், ஆப்கனின் தூதுக்குழுவின் தலைவருமான ரோசா ஒடுன்பயேவா கூறினார்.
கட்டுப்பாடுகள், குறிப்பாகக் கல்வி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீதான தடைகள் பன்னாட்டு அளவில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
கனவுகள் சிதைந்து, ஒரு பெண்ணாக இருப்பதற்காக தண்டிக்கப்படுவது என்ற மிகவும் மோசமான சூழ்நிலை தான் அங்கு நிலவி வருகின்றது. ஆனால், தலிபான்களுக்கு குற்றஉணர்ச்சி ஏதுமில்லை, அவற்றிலிருந்து பின்வாங்குவ தற்கு அவர்கள் தயாராக இருப் பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.
மகளிர் தினத்தை முன்னிட்டு, சுமார் 200க்கு மேற்பட்ட ஆப் கானிய பெண் வணிகத்தினர் காபூலில் தங்கள் தயாரிப்புகளின் கண்காட்சியை நடத்துவது வழக்கம். ஆனால், தலிபான் களால் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரும்பாலானோர் தங்கள் வணிகத்தை இழந் துள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இங்குள்ள பெண்கள் தங்கள் உரிமைகளைக் கடைப்பிடிக்க முடியாது, அதேசமயம் மகளிர் தினத்தையும் கொண்டாடவும் முடியாது.. ஏனென்றால் நாங்கள் பள்ளி, பல்கலைக்கழகம், வேலைக்குச் செல்ல முடியாது எனவே கொண்டாட எந்த நாளும் எங்களுக்கு இல்லை என்று அங்குள்ள பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அறிக்கையின்படி, 11.6 மில் லியன் ஆப்கானிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மனிதா பிமான உதவி தேவைப்படுவதாக அய்.நா. அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment