துணை ராணுவ படைகளில் ஒன்றான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
காலியிடம் : கான்ஸ்டபிள் (டெக்னிக்கல் & டிரேட்ஸ்மேன்) பிரிவில் டிரைவர் 2372, மோட்டார் மெக்கானிக் 544, புஜ்லார் 1340, குக் 2429, வாஷர்மேன் 403, சபாய் 811, டெய்லர் 242 உட்பட மொத்தம் 9223 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.8.2023 அடிப்படையில் கான்ஸ்டபிள் (டிரைவர்) பதவிக்கு 21 - 27, மற்ற பதவிகளுக்கு 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு மய்யம் : சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, சேலம், தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள் : 25.4.2023.
விவரங்களுக்கு : crpf.gov.in
No comments:
Post a Comment