‘திக்கெட்டும் வழிகாட்டும் திராவிட மாடல்' ஆசிரியர் 90 - தளபதி 70 பிறந்தநாள் விழா: கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

‘திக்கெட்டும் வழிகாட்டும் திராவிட மாடல்' ஆசிரியர் 90 - தளபதி 70 பிறந்தநாள் விழா: கருத்தரங்கம்

காரைக்குடியில் மார்ச் 26 இல் நடத்த காரைக்குடி(கழக) மாவட்டக்  கலந்துரையாடலில் தீர்மானம்

காரைக்குடி, மார்ச் 13- காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மார்ச் 12 ஞாயிறு மாலை 5 மணி அளவில் காரைக்குடி குறள் அரங்கத்தில் மாவட்டத் தலைவர் ச.அரங்க சாமி தலைமையில் நடைபெற் றது. கூட்டத்திற்கு சிவகங்கை மண்டலத் தலைவர் கா.மா. சிகாமணி மண்டல செயலாளர் மகேந்திராசன், மாவட்ட செயலாளர் ம.கு. வைகறை,  மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத் தலைவர் தன்னு டைய தலைமை உரையில் வரவு செலவு அறிக்கை முழுமையாக வாசித்து, உழைத்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி பாராட் டியதோடு, அனைத்துத் தோழர் களும் பணியைப் பகிர்ந்து கொண்டு பணியாற்ற வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மாவட்ட செயலாளர் வைகறை தனது உரையில்... தேவகோட்டை தொடர் பயணப் பொதுக்கூட்ட சுவர் எழுத்துப் பணிகள் தொடங்கி ஆசிரியரை வழியனுப்பும் வரை நடந்த திட்டமிடப்பட்ட நிகழ் வுகளை பட்டியலிட்டார்.

புதிய உறுப்பினர்களை சேர்ப் பதுதான் கழகத்தை வலிமை யாக்கும்  என்றார்.

நிகழ்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. பிப்ரவரி 26 இல் தேவ கோட்டையில் நடைபெற்ற சமூக நீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற உழைத்த  அனைத்து தோழர் களுக்கும், நன்கொடை வழங்கிய  கூட்டுறவுத் துறை கேஆர். பெரிய கருப்பன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, தோழமைக் கட்சி பிரமுகர்கள்,  நண்பர்கள்,  வணிகப் பெரு மக்கள், மறுநாள் காரைக்குடியில் மூன்று  தங்கும் விடுதிகளில்  தொடர் பயணத் தோழர்களுக்கு  தங்குவதற்கு உறுதுணையாக   பணியாற்றிய தோழர்களுக்கு நன்றி  தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. மார்ச் 26 அன்று மாலை, காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் 'திக்கெட்டும் வழிகாட்டும் திராவிட மாடல்' என்ற தலைப்பில் ஆசிரியர் 90- தளபதி 70 பிறந்தநாள் விழா கருத்தரங்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

3. ஒன்றியங்கள் தோறும் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

புதிய பொறுப்பாளர்கள்

காரைக்குடி மாவட்ட தி. க அமைப்பாளர்  கல்லூர் சி.செல் வமணி,

காரைக்குடி நகர தி.க அமைப்பாளர் ஆ.பால்கி (எ) பாலகிருஷ்ணன்

நிகழ்வில்... மாவட்ட ப.க தலைவர் சு.முழுமதி, ப.க.சுந்தரம், தேவகோட்டை நகர தலைவர் வீ.முருகப்பன், ஒன்றிய செயலா ளர் அ. ஜோசப், தலைமைக் கழக சொற்பொழிவாளர் பேராசிரி யர் மு.சு. கண்மணி, தலைமைக் கழக சொற்பொழிவாளர் தி. என்னாரசு பிராட்லா, மாவட்ட தி.க அமைப்பாளர் சி செல்வ மணி, தி. தொ.க. தலைவர் சி.சூரியமூர்த்தி, நகரச் செயலாளர் தி.க.கலைமணி, நகரத் தலைவர் ந.ஜெகதீசன் , நகர அமைப்பாளர் ஆ.பால்கி, எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் கும ரன் தாஸ், விடுதலை ஒளிப்பட கலைஞர் சிவ.தில்லை ராசா, பெரியார் பிஞ்சு கவுதம நந்தன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட துணைச்  செயலாளர் இ.ப.பழனி வேல் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment