தமிழ்நாட்டில் 86 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 24, 2023

தமிழ்நாட்டில் 86 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, மார்ச் 24 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக கரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ் நாட்டில் இன்று புதிதாக 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.  கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 517 ஆக அதிகரித்துள்ளது.   கரோனாவில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண் ணிக்கை 49 ஆக உள்ளது. அதிக பட்சமாக கோவை மற்றும் கடலூரில் 13 பேருக்கும், சென்னை மற்றும் சேலத்தில் தலா 4 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பூரில் 2 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஈரோடு, மதுரை, நாமக்கல், நாகை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில்

இந்தியாவின் பல்வேறு மாநிலங் களில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 500க்கு கீழே பதிவாகி வந்த நாட்டின் தினசரி கரோனா பாதிப்பு நேற்று ஆயிரத்து 300-அய் தாண்டி பதிவானது. இதனால் கொரோனா பரவல் அதிகரித்து வரும் தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் ஒன்றிய கரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. குறிப்பாக கேரளாவில் பொது இடங் களில் முகக்கவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment