சென்னை, மார்ச் 31- சட்டப்பேரவையில் முதலமைச்சர் அவர்கள் விதி 110இன் கீழ் கொண்டு வந்த கருத்தை வழிமொழிந்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
அமைச்சர் எ.வ.வேலு: முதலமைச்சர் அவர்கள் விதி 110-இன் கீழ்கொண்டு வந்த அந்தக் கருத்துகளை அமைச்சர் பெருமக்களின் சார்பாகவும், இங்கிருக்கிற சட்ட மன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் உடனடியாக அதனை நான் அதை வழிமொழிய கடமைப்பட்டிருக்கிறேன். வைக்கம் போராட்டம் என்பது இந்தியாவினுடைய மனித உரிமைப் போராட்டம். இந்தியாவில் முதன்முதலாக சமூக நீதிக்காக வித்திட்ட போராட்டம்தான் வைக்கம் போராட்டம். எனவே, அந்த நினைவைப் போற்றுகின்ற வகையில் இங்கே நமது சட்டமன்ற உறுப்பினர் மணி அவர்கள் குறிப்பிட்டதைப் போல் பத்தாண்டுக் காலமாக அது பாழ்பட்டு கிடக்கின்ற அந்த இடத்தைப் புனரமைக்க வேண்டுமென்ற அடிப்படையில் நேரிடையாக என்னை அங்கு அனுப்பி, அவற்றையெல்லாம் சீர் செய்ய வேண்டுமென்ற அடிப்படையில் ஆய்வு செய்து, முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்திருக்கிற அறிவிப்பின் அடிப்படையில், இன்றைக்கு அந்த நூற்றாண்டு விழாவையும் ஓராண்டுக்காலம் அதை நடத்துவது முடிவு செய்து, அதற்கு 8 கோடியே 14 இலட்ச ரூபாய் புனரமைப்பு செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக அந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்றைக்கு ஆணையிட்டிருக்கின்ற, திராவிட இயக்கத்தினுடைய நான்காம் தலைமுறையின் தலைவர் , திராவிட நாயகர் தளபதியார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை அமைச்சர் பெருமக்கள் சார்பாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் தெரிவித்து அமர்கின்றேன்.
- இவ்வா று அமைச்சர் எ. வ.வேலு பேசினார்.
No comments:
Post a Comment