மதுரை, மார்ச் 19 புதுக்கோட்டை மாவட்ட வேளாண் விற்பனைக் கூடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றியவர் திலகம். பணிக் காலத்தில் கடந்த 2009இல் திடீரென இறந்தார். இதனால் தனக்கு கருணை அடிப்படையில் வாரிசுப் பணி கேட்டு திலகத்தின் மகள் பர்வதவர்த்தினி விண்ணப்பித்தார்.
திருமணமானவர் என்பதால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து பர்வதவர்த்தினி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, வாரிசுப் பணி வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்தார். மேலும் மனுவை வேளாண் விற்பனை சங்க செயலர் 12 வாரத்தில் பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து தொழிலாளர் துறை முதன்மை செயலர் மற்றும் வேளாண் விற்பனைத்துறை செயலர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோ ரியா கவுரி ஆகியோர் விசாரித்து, திருமண மான பெண்ணுக்கு கருணைப்பணி வழங்க மறுத்த உத்தரவை தனி நீதிபதி ரத்து செய் துள்ளார். இதில், தலையிட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனவே, மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படு கிறது. 6 மாதத்தில் கருணைப்பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment