இ-சேவை மய்யங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

இ-சேவை மய்யங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை,மார்ச்29- இ-சேவை மய்யங் களில் விரைவில் 600 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத் தின்போது பேசிய ஆற்காடுஉறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,தொகுதியில் உள்ள சலமநத்தம்பகுதியில் இ-சேவை மய்யம் அமைப்பது குறித்தும், விளவங் கோடு உறுப்பினர் விஜயதரணி, சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மய்யம் அமைக்கும்போது அலுவலர்களுக்கான ஊதியம், இறப்பு சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் தாமதம், சேவையை இலவசமாக வழங் குவது குறித்தும் கேள்வி எழுப்பினர்.

இவற்றுக்கு பதிலளித்து, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: 

தமிழ்நாடு அரசின் 235 சேவைகள், 9720 இ-சேவை மய்யங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, தமிழ்நாட்டில் அனைவருக்கும் இ_-சேவை மய்யம் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

அதன் அடிப்படையில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் விண்ணப்பிக்கும் தகுதி யானவர்களுக்கு மனுக்களை பரிசீலித்து இ_-சேவை மய்யங்கள் தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது. 234 சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கும் இ_-சேவை மய்யத்தை தொடங்குவதற்கான வசதி செய்யப்பட்டு, பலர் இந்த சேவையை தொடங்கியுள்ளனர். 85 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அங்கு பணியாற்றுபவர்களுக்கு பயிற்சி வழங்கும்படி கோரியதன்பேரில் பயிற்சி வழங்கப்பட் டுள்ளது.

மேலும் பயிற்சி அளிக்க கோரிக்கை விடுத்தால் பயிற்சி அளிக்கப்படும். சேவைகள் இலவசமாக வழங்குவது சாத்தியமில்லை. அலுவலகங்களுக்கு சென்று காத்திருப்பது தவிர்க்கப்பட் டுள்ளது. தற்போது 235 சேவைகள் வழங்கப்படுகிறது. விரைவில் பணம் செலுத்துதல் உள்ளிட்ட 600 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர ஒன்றிய அரசின் சேவைகளையும் இதில் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இதுதவிர, 12,525 கிராமங்களுக்கும் ‘டான்பிநெட்’ திட்டத்தின்கீழ், பைபர் ஆப்டிகல் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்ததும் இணைப்பு வேகம் அதிக ரிக்கும். இ-சேவை மய்யத்தில் பணியாளர்களை அரசு நியமிக்க முடியாது. அதே நேரத்தில், பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தொகை அதாவது ரூ.100க்கான சேவையில் ரூ.70 வழங்கப் படுகிறது.

இறப்பு சான்றிதழ் பொறுத்தவரை, சான்றிதழ்களை யாரும் நிறுத்தி வைக்க முடியாத வகையில் மாற்றியுள்ளோம். அதில் ஒளிவுமறைவற்ற தன்மையில் சேவை வழங்கப்படுகிறது. நீண்ட நிலுவை இருந்தால், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் தரப்படுகிறது. விரைவில் இ_-சேவை 2.0 திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அப்போது இன்னும் விரைவாக சேவைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

No comments:

Post a Comment