பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 40 நாள்கள் தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச்சார சுற்றுப் பயணத்தை கழகத் தலைவர் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று (5.3.2023) நன்னிலத்தில் உரையாற்றி முடித்த நிலையில், உடல் சோர்வும், உடல்வலியும் கூடுதலாக இருந்ததாலும், வைரஸ் ஜூரம் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படியும், கழகப் பொறுப்பாளர்களின் வேண்டுகோள்படியும் தவிர்க்க முடியாத சூழலில், மார்ச் 6 ஆம் தேதிமுதல் மார்ச் 10 ஆம் தேதிவரை எஞ்சியிருக்கும் கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தற்காலிமாக ஒத்தி வைக்கப்படுகிறது.
அடுத்த பயணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தோழர்கள் பொறுத்திடுக!
- கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment