இராமநாதபுரம், மார்ச் 5- இராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடி தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதில் அதிமுக கவுன்சிலர் உள்பட அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரமக்குடியில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த ஒரு மாதகாலமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது குறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்தனர்.அப்போது அப்பகுதியைச் சேர்ந்த கயல்விழி மற்றும் உமா (என்ற) அன்னலெட்சுமி ஆகியோர் தன்னை சில நபர்களிடம் அழைத்துச் சென்றதாக தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து உடனடியாக இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
உடனடியாக இது குறித்து முழு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார் இதைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் சுதா தலைமையில் மாணவியிடம் தனி விசாரணை நடத்தினர்.
அதில் பரமக்குடி நகர் அ.தி.மு.க. அவைத் தலைவர் மற்றும் பரமக்குடி நகர்மன்ற உறுப்பினருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகர், ராஜா முகமது ஆகியோர் தன்னை கடத்திச் சென்று பார்த்திபனூர் அருகே உள்ள தங்கும் விடுதியில் பல முறை கும்பலாக வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிவித்தார் .
இதை தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட சிகாமணி, புதுமலர் பிரபாகர் , ராஜா முகமது மற்றும் இதில் ஈடுபட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment