ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 5, 2023

ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு

ஏதென்ஸ், மார்ச் 5-- கிரீஸ் நாட்டின் ஏதேன் சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.  இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தன. அப்போது 3 பெட்டிகள் வெடித்தது. 

இந்தக் கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், 85 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், கிரீஸ் ரயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிர் திசையில் 2 ரயில்கள் எப்படி வந்தது என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment