பாஜக நிர்வாகியிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

பாஜக நிர்வாகியிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

திருவண்ணாமலை, மார்ச் 19- திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகியிடமிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்த மான ரூ.50 கோடி மதிப்புள்ள 23,800 சதுர அடி இடத்தை இந்து சமய அற நிலையத் துறை 18.3.2023 அன்று மீட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உடன் இணைந்த அம்மணி அம்மன் மடத் துக்கு சொந்தமான 23,800 சதுரடி இடம், கோயிலின் வடக்கு திசையில் உள்ள அம்மணி அம்மன் கோபுரம் முன்பு உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து வரும் இந்த இடத்தை, நிர்வகிப்பதில் பிரச்சினை எழுந்தபோது, திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைராக இருந்த வழக் குரைஞர் டி.எஸ்.சங்கர், சுமார் 20 ஆண்டுக்கு முன்பு, தன் வசப்படுத்தி கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த இடத்தில், சுமார் ஆயிரம் சதுரடியில் வீடு (தரைத் தளம், முதல் தளம்) கட்டி உள்ளார். தரைத்தளத்தில் வழக்குரைஞர் அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. அம்மணி அம்மன் மடத்தின் அறைகளை வணிக ரீதியாக பயன்படுத்தி வந்துள்ளார். காலி இடத்தில் கார் களை நிறுத்தவும், விநா யகர் சிலை வடிவமைக்கும் இடமாகவும் பயன்படுத்தி உள்ளார்.

கோயிலுக்கு வாடகை செலுத்தவில்லை என்பதால் பல லட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்து முன்னணியின் மாவட்டத் தலைவராக இருந்த டி.எஸ் சங்கர், மத்தியில் பாஜக ஆட் சிக்கு வந்ததும், அக்கட் சியில் தன்னை இணைத் துக் கொண்டு ஒன்றிய அரசு தரப்பு வழக்குரைஞ ராக உள்ளார். மேலும், பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவ ராக இருந்து வருகிறார். இந்நிலையில், வழக்குரைஞர் டி.எஸ்.சங்கர் மற்றும் அவரது மனைவி தீபா ஆகியோர், அண்ணா மலையார் கோயிலுக்கு சொந்தமான 23,800 சதுரடி இடத்தை ஆக் கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, இந்து சமய அற நிலையத் துறை மண்டல இணை ஆணையரால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது.

04.-05.20-22ஆ-ம் தேதி நடைபெற்ற விசாரணைக்கு டி.எஸ். சங்கர், தீபா ஆகியோர் ஆஜராக ததால், 23,800 சதுர அடி இடமும் கோயிலுக்கு சொந்தமான என முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, திருவண்ணா மலை சார்பு நீதிமன்றத் தில் வழக்குரைஞர் டிஎஸ்.சங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். இவர், போதிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால், அவரது மனுவை சார்பு நீதிமன்றம் கடந்த 13ஆ-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அண் ணாமலையார் கோயில் உடன் இணைந்த அம் மணி அம்மன் மடத்துக்கு சொந்தமான 23,800 இடத்தை ஒப்படைக்க வேண்டும் என வழக்குரை ஞர் டிஎஸ் சங்கர் மற்றும் அவரது மனைவி தீபாவுக்கு கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) வே.குமரேசன் கடந்த 15ஆ-ம் தேதி அறிக்கை வழங்கி உள்ளார். 2நாட்களில் ஒப்படைக்க தவறினால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மீட்கும் நட வடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், காவல்துறை பாதுகாப்பு டன் ரூ.50 கோடி மதிப்புள்ள 23,800 சதுரடி இடத்தை மீட்கும் பணியை இந்து சமய அற நிலையத் துறை சனிக் கிழமை காலை நடைபெற் றது. 2 மாடி வீட்டின் கட்டடத்தை பொக் லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து, 23,800 சதுரடி இடத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து சீல் வைக்கப் பட்டது.

No comments:

Post a Comment