சென்னை, மார்ச் 2- வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை ரூ.50-ம், வர்த்தகப் பயன் பாட்டுக்கான எரிவாயு உருளை ரூ.351-ம் விலை உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.710-ஆக இருந்தது. இது படிப் படியாக அதிகரித்து கடந்த மாதம் ரூ.1,068.50-க்குவிற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (1.3.2023) சிலிண்டருக்கு ரூ.50 அதிகரித்து, ரூ.1,118.50-க்கு விற்பனை செய்யப் படுகிறது. கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, வணி கப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.351 அதிகரிக்கப்பட்டு, ரூ.2,268-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை அதிகரித்திருப்பது பொது மக்களை பெரிதும் கவலையடையச் செய்துள்ளது.
மேலும், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளதால், ஓட்டல்கள், தேநீர்க் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எரிவாயு உருளை விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன்:
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமை யாக உயர்ந்து வரும் சூழலில், எரிவாயு உருளை விலையையும் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தி யுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மூன்று மாநிலங் களின் தேர்தல்கள் முடிந்த பிறகு, விலையை உயர்த்தி பொது மக்களை பாஜக அரசு வஞ்சித்துள்ளது. இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்:
எரிவாயு உருளை விலை உயர்வை கைவிடக் கோரி, எதிர்க்கட்சிகளை திரட்டி, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment