வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை - டிஜிபி எச்சரிக்கைசென்னை, மார்ச் 5 வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு
வெளியிட்ட செய்திக்குறிப்பு: புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக தவறான செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
வதந்தி பரப்பியது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ‘தைனிக் பாஸ்கர்’ பத்திரிகையின் ஆசிரியர், திருப்பூர் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் ‘தன்வீர் போஸ்ட்’ என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர், தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் பிரசாந்த் உமாராவ், கிருஷ்ணகிரி மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சுபம் சுக்லா ஆகிய4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள 4 பேரையும்கைது செய்ய தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் முழு பாதுகாப்புடன் அமைதியாக வசிக்கின்றனர். அமைதியை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்தி பரப்புவோர் பற்றியவிவரங்கள் காவல் துறையால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். வதந்தி பரப்பி கைது நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்களுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து தனிப்படை காவல்துறையில் டில்லி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று, காவல் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் பரவிய காட்சிப் பதிவுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதை பரப்பியவர்களை பிடிக்க அம்மாநில காவல் துறை உதவியை அவர்கள் நாட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment