தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு



சென்னை மார்ச் 17  தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமாருக்கு, அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நாட்டில் மார்ச்முதல் வாரத்தில் 2,082 எனப் பதிவான மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை, அதற்கடுத்த வாரத்தில் 3,264-ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை தொற்று பாதிப்பு 170-லிருந்து, 258-ஆக அதிகரித் துள்ளது. கரோனாபரிசோதனை செய்யப்பட்டவர்களில் 1.99 சதவீதம் பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, சேலம், நீலகிரி,திருப்பூர், திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

 இதைக் கருத்தில் கொண்டு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் தீவிர கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். நோயாளி களைக் கண்டறிதல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் தடுப்பூசி போடுதல் என அனைத்து நிலைகளிலும் கரோனா தடுப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு விரிவு படுத்த வேண்டும். இன்ஃப்ளூயன்சா வகை காய்ச்சல் அல்லது தீவிர நுரையீரல் தொற்று காய்ச்சல் பாதிப்புகளை மருத்துவ முகாம்கள் மூலம் கண்டறிந்து, பரவாமல் கட்டுப்படுத்துவது முக்கியமாகும். 

மேலும், கரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள், வெளிநாடுகளில் இருந்து வந்து தொற்றுக்கு உள்ளானவர்களின் சளி மாதிரிகளை மரபணுப் பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும். கரோனா பரவ லைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முன்னெடுக்கும் பணிகளுக்கு, ஒன்றியஅரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment