சென்னை, மார்ச் 23- தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்றம் கொலீஜி யம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மாவட்ட நீதிபதிகள் 4 பேரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங் கிய கொலீஜியம், ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரின் பெயர்களை உயர் நீதிமன்ற நீதி பதிகளாக நியமிக்க பரிந்துரைத் தது.
சென்னை உயர் நீதிமன்ற நீதி பதிகளாக நான்கு நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க 2022 ஆகஸ்ட் 10 அன்று உயர் நீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ஆளுநரின் ஒப்புதல் உள்ளது என்று மார்ச் 21 தேதியிட்ட தீர்மா னத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோப்பு ஜனவரி 5, 2023 அன்று நீதித்துறையிடம் இருந்து பெறப்பட்டது.
“உயர்நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவதற்கு மேற்கூறிய பெயரிடப்பட்ட நீதித்துறை அதி காரிகளின் தகுதியைக் கண்டறியும் பொருட்டு, நடைமுறைக் குறிப் பின் அடிப்படையில், இந்த கொலீ ஜியம், சென்னை உயர் நீதிமன்ற விவகாரங்களை அறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் ஆலோ சனை நடத்தியது,” என்று தீர்மா னத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது.
மற்றொரு தீர்மானத்தில், பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக மூத்த வழக்குரைஞர் ஹர்பிரீத் சிங் ப்ராரை நியமிப்பதற்கான தனது முந்தைய பரிந்துரையை ஜூலை 25, 2022 தேதியிட்ட கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியது.
No comments:
Post a Comment