கருநாடகா: லோக் ஆயுக்தா வழக்கு அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

கருநாடகா: லோக் ஆயுக்தா வழக்கு அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை

மங்களூரு,மார்ச்19- தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி நகரசபையில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருபவர் பத்மநாபா. இவர் முல்கி டவுன் பஞ்சாயத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு அவர் மீது லோக் ஆயுக்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் மீது மங்களூரு 3ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கு மங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி பி.பி.ஜகாதி கடந்த 16.3.2023 அன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, பத்மநாபா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.26.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

No comments:

Post a Comment