ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கு கருநாடக பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கு கருநாடக பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் கைது

பெங்களூரு, மார்ச் 29 லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கருநாடக பாஜக  சட்டமன்ற உறுப்பினர் விருப் பக்சப்பா கைது செய்யப்பட்டுள் ளார். விருப்பக்சப்பா முன் பிணை மனுவை கருநாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கைது செய் யப்பட்டார். லஞ்சம் வாங்கும் போது அவரது மகன் கைது செய்யப்பட்ட நிலையில், வீட் டில் நடத்திய ரெய்டில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப் பட்டது.

கருநாடக சோப்ஸ் அன்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்காக லஞ்ச பெற்ற வழக்கில் கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் மடல் விருபக்சப்பா  கைது செய் யப்பட்டார். இவரது முன் பிணை மனு சமீபத்தில் ரத்து செய்யபட்டது. 

கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் மடல் விருபக்சப்பா வின் அலு வலகத்தில் அவரது மகன் பிரசாந்த் மடல், கடந்த மாதம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவு மாக சிக்கினார். இந்த லஞ்சம் கருநாடகா சோப்ஸ் அன்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமி டெட் நிறுவனத்திற்கு மூலப் பொருட்களை வழங்குவ தற்கான ஒப்பந்தத்தை பெறு வதற்காகவே இந்த லஞ்சம் கொடுக்கப் பட்டதாக வழக்கை விசாரித்து வரும் மக்கள் நீதிமன்ற காவ லர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் இந்த வழக்கில், விருபக்சப்பா பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட் டார்.

இதைத்தொடர்ந்து நடந்த சோதனையில் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் விருபக்சப்பா வீட்டில் கணக்கில் வராத 8 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் கருநாடகா சோப்ஸ் அன்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமி டெட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த மாத தொடக்கத்தில், முன் பிணை பெற்று வெளியில் வந்த சட்டமன்ற உறுப்பினருக்கு, தாவணங்கேரில் உள்ள அவரது சொந்த ஊரில் மிக பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், பிணை மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், அவரது பிணை ரத்து செய் யப்பட்டது.

No comments:

Post a Comment