போபால் மார்ச் 4 மத்திய பிரதேச மாநிலத்தில் இணை யத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறார் ஆபா சப் படங்களை வெளியிட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மய்யம் கண்டறிந்துள் ளது. இந்த வழக்குகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாக வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய காணாமல் போன மற்றும் ஏமாற்றப்பட்ட குழந்தைகளுக் கான மய்யம் (என்சிஎம்இசி) அண்மையில் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆய்வை நடத் தியது. அதில் அந்த மாநிலத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் இணையத்தில் சிறார் ஆபாசப் படங்களை வெளியிடுதல், இணையத்தில் பாலி யல் தூண்டுதல் தொடர் பான நிகழ்வுகளை நடத்துதல் போன்ற செயல்களை செய்து வருவதாக என்சிஎம்இசி தெரிவித்துள்ளது. இதில் இந்தூரில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோ ரும், போபாலில் 1,000-த்துக்கும் அதிகமானோரும் இந்தச் செய லில் ஈடுபடுவதாகத் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மத்தியபிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் 500 முதல் 600 வழக்குகள் வரை பதிவாகியுள் ளதாகவும் என்சிஎம்இசி தெரிவித்துள்ளது. பல்வேறு மாநி லங்களிலும் சிறார் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிடும் சம்பவங்கள் அதி கரித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த விவரங்களை மத்திய பிரதேச காவல்துறையினருக்கு என்சிஎம்இசி அளித்துள்ளது. மேலும் மத்திய புலனாய்வு அமைப்பிலிருந்தும், சைபர் டிப்லைன் அமைப்பிலிருந்தும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து சிறார் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிடும் 4 ஆயிரம் பேர் விரைவில் கைதாக வாய்ப் புள்ளத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்படும் நபர்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட தலைமையகத்துக்கு காவல் துறையினர் அனுப்பியுள்ளனர். விரைவில் கைது நடவடிக்கை தொடங்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது குறித்து மத்திய பிரதேச மாநில சைபர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த வழக்குகள் தொடர்பாக முதலில் 4 ஆயிரம் பேர் விரைவில் கைதாகவுள்ளனர். வெளி நாடுகளைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் ஆபாச காட்சிப் பதிவுகளை டவுன் லோடு செய்து, இங்கு இணை யத்தில் வெளியிடுகின்றனர். மேலும் அவை சமூக வலைத் தளங்கள் மூலமாகவும் பரப்பப் படுகிறது. சிறார் ஆபாசப் படங்களைத் தடுக்கும் டிராக்கர் வசதி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ளது. அதுபோன்ற சாஃப்ட்வேர் நமக்கும் தேவை. அப்போது தான் இவற்றைத் தடுக்கமுடி யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
12 வயது மற்றும் அதற்கு கீழேயுள்ள சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்ட மசோதாவை 2017-ஆம் ஆண்டு மத்தியபிரதேச அரசு அறி முகம் செய்து சட்டமாக்கியது. அதன்பின்னர் அதுபோன்ற 72 வழக்குகளில் குற்றவாளி களுக்கு மரண தண்டனையை மத்தியபிரதேசத்தில் உள்ள நீதிமன்றங்கள் வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment