லக்னோ, மார்ச் 4- ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு சிறப்பு நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்துள் ளது. எஞ்சிய 3 பேரை குற்றச்சாட் டுகளில் இருந்து விடு வித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் 19 வயது தாழ்த்ப்பட்ட சமூக பெண் ஒருவர், வேறு சமூகத்தை சேர்ந்த 4 பேர் கும்பலால் கடத்திச் செல்லப்பட் டார். பிறகு அவர் கடுமையாக தாக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். குருதி வெள்ளத்தில் மீட்கப்பட்ட அப்பெண் டில்லி சப்தர்ஜங் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அப்பெண்ணின் உடல் அவரது சொந்த கிராமத் துக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்பட்டு, பெற்றோரின் ஒப்பு தலின்றி மாவட்ட நிர்வாகத்தால் எரியூட்டப்பட்டது. நாடு முழு வதும் அதிர்வலைகளை ஏற்படுத் திய இந்த நிகழ்வில் பெரும் போராட்டங்களும் வெடித்தன. அலகாபாத் உயர் நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஅய்-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சந்தீப் (20), ரவி (35) லவகுஷ் (23), ராமு (26) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை குற்றச் சாட்டுகளும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பிற குற் றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கில் ஹத்ராஸ் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மார்ச் 2இல் தீர்ப்பு வழங்கியது. இதில் முக்கிய குற்ற வாளியான சந்தீப்புக்கு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதித்தது. ரவி,லவகுஷ், ராமு ஆகிய 3 பேரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடு வித்தது. இந்த வழக்கில் 3 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
No comments:
Post a Comment