புதுடில்லி, மார்ச் 16- நாடு முழுவதும் எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், கரோனா தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று (15.3.2023) ஒரே நாளில் 617 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ‘எக்ஸ்பிபி.1.16’ புதிய வகை கரோனா காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று, நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் நாடு முழுவதும் குழந்தைகள், சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டோர் என சுமார் 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment