புதுடில்லி, மார்ச் 9 இந்தியாவில் கரோனா தொற்றால் புதிதாக 326 பேர் பாதிக்கப்பட் டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளது. பாதிப்பு கடந்த 5-ஆம் தேதி 324 ஆக இருந்தது. நேற்று முன்தினம் (7.3.2023) 281, நேற்று 266 ஆக குறைந் திருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு பாதிப்பு இன்று மீண்டும் 300-அய் தாண்டி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட வர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 88 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று (8.3.2023) 220 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 842 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்புடன் மருத் துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரு கிறது. அந்த வகையில் தற்போதைய நில வரப்படி 3,076 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 106 அதிகமாகும். தொற்று பாதிப்பால் தொடர்ந்து 4-ஆவது நாளாக புதிய உயிரிழப்புகள் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,775 ஆக நீடிக்கிறது.
No comments:
Post a Comment