சென்னை, மார்ச் 30- திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடி சிறீவாரி வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வலம்புரி விநாயகர், பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, சிறீவாரி வெங்கடா சலபதி, 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.
வருகிற 1-ஆம் தேதி (1.4.2023) உலக நன்மைக்காகவும், கரோனா தொற்று ஒழியவும் 108 திவ்ய தேசங்களுக்கு சென்று அனைத்து (புண்ணிய நதி களாம்) நதிகளிலும் நீராடி பூஜிக்கப் பட்டு வந்த சிறீராமச்சந்திர மூர்த்தி சொர்ண ராம பாதங்களுக்கு காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு அர்ச்சனை என்று - அதற்கான ஏற்பாடுகளை சிறீஜெயமாருதி சேவா டிரஸ்ட் செய்து வருகிறது.
மறுநாள் 2-ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது என்கிறனவர். அன்றைய தினம் காலை 8 மணிக்கு விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், சந்தனம் போன்ற மங்கள திரவியங்களால் விசேஷ அபிஷேகம் இது மட்டு மல்லாமல் 9 மணிக்கு மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு மற்றும் திருமஞ்சனமும், 10 மணிக்கு வாசுகி மனோகரன் குழுவினரின் சிறீராமனும், அனுமனும் என்ற தலைப்பில் இசைசொற்பொழிவும் நடக்குமாம். மதியம் 12.30 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடச உபசாரம், சாற்றுமுறை மற்றும் திருவாராமனம் ஆகியவை நடக்கிறாம்.
பொருளாதார சிக்கலில் மக்கள் படும் இன்னல்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாது - பால் தட்டுப்பாடு நாட்டில் நிலவுவதையும் கவனத்தில் கொள்ளாது- 2000 லிட்டர் பால் மற் றும் இதரப் பொருட்களைப் பாழாக் குவதா? என்ற கேள்வி பக்தர்களி டையேகூட நிலவுகின்றது.
No comments:
Post a Comment