2ஆம் கட்ட அகழாய்விற்கு அளவீடு செய்யும் பணி தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

2ஆம் கட்ட அகழாய்விற்கு அளவீடு செய்யும் பணி தொடக்கம்

விருதுநகர், மார்ச் 29- தாயில் பட்டி, விஜயகரி சல்குளத்தில் 2ஆம் கட்ட அகழாய்விற்கு அளவீடு செய்யும் பணி தொடங்கியது. சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்தாண்டு செப்டம்பரில் முடிவ டைந்தது. 2ஆம் கட்ட அகழாய்வுப் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை சுத்தம் செய்து அளவீடு செய்து தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளது.

முதல் கட்ட அகழாய் வில் சங்கு வளையல்கள், விலை உயர்ந்த சூது பவளம், நெசவுத் தொழில் பயன்படுத்தக்கூடிய தக்கலி, ஏராளமான மண் பானைகள், மனித உருவ பொம்மை, அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன்கள், தொங்கட்டான்கள், சிறு குழந்தைகள் பயன்படுத் தக்கூடிய விளையாட்டுப் பொருள்கள், விசில், திமில் காளையின் சிற்பம், வணிக முத்திரை, செப்பு நாணயம், விலங்கு களின் எலும்புகள், கோடரி கருவிகள், தங்க அணிகலன்கள், வட்ட சில்லுகள், பாசிமணிகள், உள்ளிட்ட 3,254 அரிய வகை பொருள்கள் கண் டெடுக்கப்பட் டுள்ளன.

2ஆம் கட்ட அக ழாய்வு பணி நடை பெற ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 3 ஏக்கர் இடத்தை தொல்லி யல் துறையினர், வரு வாய்த் துறையினருடன் சேர்ந்து அளவீடு மற்றும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. 

மேலும் புதிதாக 18 குழிகள் ஆய்வு செய்ய அளவீடு செய்து தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளது. தேர்வு செய்யப் பட்ட இடத்தில் அமைச் சர் தங்கம் தென்னரசு, ஆட்சியர் ஜெயசீலன் உத் தரவிற்கு பின்னர் ஏப்ரல் மாதத்தில் 2ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளதாக அக ழாய்வு இயக்குநர் பொன்னு சாமி தெரிவித் தார்.

No comments:

Post a Comment