இந்தத் தொடர் வேட்டைக்கு முடிவே இல்லையா?
சென்னை, மார்ச் 24 தமிழ்நாடு மீன வர்கள் 12 பேரை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட் டினத்தில் இருந்து நேற்று (23.3.2023) 2 விசைப்படகுகளில் 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டி ருந்தபோது, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர் களை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களது 2 விசைப்படகு களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: இலங்கை கடற்படையால் 23-ஆம் தேதி 12 தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் அவர் களது 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுஉள்ள நிகழ்வை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 28 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ள தோடு, 4 படகுகளும் இலங்கை கடற் படையால் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. இதை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு தூதரக முயற்சிகள் எடுத்து வரும் சூழலிலும், மீனவர்கள் மீதான தாக் குதல், கைது நடவடிக்கைகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.பாக் ஜலசந்தி பகுதியில் தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு ஒன்றிய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதுதொடர்பாக உறுதியான மற்றும் காலவரையறைக்குட்பட்ட ஒரு திட்டத்தை உடனடியாக வகுக்க வேண் டும். தற்போதைய நிலவரப்படி தமிழ் நாட்டைச் சேர்ந்த 104 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையால் விடுவிக்கப்பட்ட 5 மீன் பிடிப் படகுகளும் இன்னும் இந்தியா விடம் ஒப்படைக்கப்படவில்லை. 16 இந்திய மீனவர்கள் ஏற்கெனவே இலங் கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே தாங்கள் இதில் தலையிட்டு, 28 மீனவர்கள் மற்றும் அவர்களது படகு களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment