பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: ஆசிரியை 6, அலுவலக உதவியாளர் 65, உப கோயில் பல வேலை 26, தொழில் நுட்ப உதவியாளர் (சிவில்) 6, தட்டச்சர் 6, பூஜை காவல் 10, காவல் 50, பிளம்பர் 15, வின்ச் ஆப்பரேட்டர் 8, பம்ப் ஆப்பரேட்டர் 6, எச்.டி. ஆப்பரேட்டர் 6, தவில் 5, தாளம் 3 உட்பட மொத்தம் 281 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி உட்பட பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
வயது: 1.7.2022இல் 18 - 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஹிந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண் ணப்பிக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : கல்வித்தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வு, கூடுதல் தகுதி, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப் பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோயில், பழநி - 624 601, திண்டுக்கல் மாவட்டம்.
கடைசி நாள்: 7.4.2023 மாலை 5:45 மணி.
விபரங்களுக்கு: palanimurugan.hrce.tn.gov.in
No comments:
Post a Comment