வல்லம், மார்ச் 24- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பயிலும் கலை, அறிவியல், மேலாண்மை வணிகவியல் துறைகளில் பயிலும் இறுதி யாண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்புக்கான நேர் காணல் முகாம் இப்பல்கலைக் கழகத்தின் வேலைவாய்ப்பு மய்யத்தால் 18.03.2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி தொடங்கி வைத் தார். இப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா, கல்விப் புல முதன் மையர் பேராசிரியர் ஏ.ஜார்ஜ், ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ் வேலை வாய்ப்பு நேர்காணலில் துறை சார்ந்த ஒருங்கிணைப் பாளர்களும் மற்றும் மனிதவள மேலாண்மை மய்ய இயக்குந ரும் ஒருங்கிணைத்தனர்.
வேலைவாய்ப்பு நேர் காணல் மற்றும் தகுதித் தேர் வில் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியியல், மேலாண்மை, வணிகவியல், இயற்பியல், வேதியியல், கணி தம், சமூக அறிவியல், அரசியல் அறிவியல் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் நடை பெற்ற நேர்காணலில் கலந்த கொண்ட மாணவர்களில் 86 விழுக்காடு மாணவர்கள் வேலை வாய்ப்பிற்கான ஆணையை பெற்றுக் கொண்டனர்.
இவ்வேலை வாய்ப்பு முகாமில் 16 நிறுவனங்கள் (காயின்டிஸ் மென்பொருள் பி.லிமிடெட், ஸ்டேட் ஸ்ட்ரிட் லிமிடெட், அல்செக் தொழில் நுட்பம் பி.லிமிடெட், ஆல்ட் ரஸ்ட் டெக்னாலஜி பி.லிமி டெட், இமார்ரஸ்ட் கற்றல் பி.லிமிடெட் கோயம்புத்தூர், அப்பல்லோ மருந்தகம் பி.லிமிடெட், இசப் வங்கி பி.லிமிடெட், முத்தூட் நிதி நிறு வனம் பி.லிமிடெட், மைக்ரீச் பி.லிமிடெட், சியில் பி.லிமி டெட், வாப்கோ பி.லிமிடெட், எல் & டி நிதி பி.லிமிடெட், ஃ பாக்ஸ்கான் பி.லிமிடெட்) பங்குபெற்றன. இந்நிறுவனங் களின் மேலாண்மை முதன்மை யர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை மாணவர்களுக்கு அளித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட் டினை முனைவர் பி.குரு, இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஒருங்கிணைப்பாளர், மற்றும் ஆங்கிலத் துறையின் முனைவர் கே.செல்வம், இயக்குநர் (பயிற்சி) ஆகியோர் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment