நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுடில்லி, மார்ச் 23 உயர்நீதிமன்றங் களில் நியமிக்கப்பட்டுள்ள 569 நீதிபதிகளில் 17 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.) 9 பேர் பழங்குடியினர் வகுப்பினைச் (எஸ்.டி.) சேர்ந்த வர்கள் என்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய சட்ட அமைச் சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிய மனத்தில் உச்சநீதிமன்றத்துடன் கலந் தாலோசித்து சமூக பன்முகத்தன்மை தொடர்பான தரவுகளை பதிவு செய்யும் திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் ஒன் றிய அரசாங்கத்தால் துவங்கப்பட்டது. ஆனால் மூத்த வழக்குரைஞர்களில் எஸ்சி, எஸ்டி உறுப்பினர் களின் எண் ணிக்கை குறித்து குறிப்பிட்ட விவ ரங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2018-ஆம் ஆண்டு முதல் உயர்நீதி மன்றங் களில் நியமனம் செய்யப்பட்ட 569 நீதிபதிகளில் 26 பேர் மட்டுமே எஸ்சி, எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த வர்கள் என ஒன்றிய சட்ட அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அதிர்ச்சித் தக வலை வெளியிட்டுள்ளது. நாடாளு மன்ற உறுப்பினர்கள் டி.ரவிக்குமார் (விசிக - தமிழ்நாடு), நபா குமார் சரனியா (கண சுரக்சா கட்சி - அசாம்) ஒன்றிய அரசிடம் (இருவரும் தனித்தனியாக கேள்வி - ஒன்றாக சேர்த்து கொடுக்கப் பட்டுள்ளது), “உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரை ஞர்கள், வழக்குரைஞர்களாக நியமிக் கப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி. வழக் குரைஞர்களின் விவரங்கள்; நீதி மன்ற வாரியாக சமீப காலங்களில் உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முன்மொழியப் பட்ட எஸ்சி, எஸ்டி நீதி பதிகள், வழக் குரைஞர்களின் விவரங்கள்; சுதந்தி ரத்திற்குப் பிறகு உயர்நீதிமன்றங்கள், உச்சநீதி மன்றங்களில் எஸ்சி, எஸ்டி நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள வர்கள் விவரம்; எஸ்சி,எஸ்டி (வன் கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 இன் கீழ் வழக்குகள்/மேல்முறையீடுகளை விசாரிக்க சிறப்பு பெஞ்சைக் கொண்ட உயர்நீதி மன்றங்களின் விவரங்கள் என்ன?” என பல்வேறு கேள்விகள் எழுப்பினர். இதுகுறித்து ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளு மன்றத்தில் கூறியதாவது:
“நாட்டில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன. இந்த உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி களின் எண்ணிக்கை 1114 ஆகும். அதில் 840 நீதிபதிகள் நிரந்தரமாகவும் மீத முள்ள 274 பேர் கூடுதல் நீதிபதி களாகவும் உள்ள னர். மார்ச் 1, 2023 நிலவரப்படி 333 நீதிபதி இடங்கள் (சுமார் 29%) காலியாக உள்ள நிலை யில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் உயர்நீதி மன்றங்களில் மொத்தம் 569 நீதிபதிகள் நிய மிக்கப்பட்டுள்ளனர். 569 நீதிபதிகளில் 17 பேர் தாழ்த்தப் பட்டோர் (எஸ்சி), 9 பேர் பழங்குடியினர் (எஸ்டி), 64 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), 15 பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 20 நீதிபதி களின் சமூகப் பின்னணி குறித்த தக வல்கள் அரசிடம் இல்லை. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் அரசமைப்பின் 217 மற்றும் 224ஆவது பிரிவின் கீழ் செய்யப்படுகிறது. இது குறிப்பிட்ட ஜாதி அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வில்லை. எவ்வாறாயினும், உயர்நீதித் துறையில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மைக்கு அரசு உறுதிபூண்டுள்ளது. நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான முன் மொழி வுகளை அனுப்பும் போது, எஸ்சி, எஸ்டிகளைச் சேர்ந்த தகுதியான வேட்பாளர் களை உரிய பரிசீலனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் ஒன்றிய அரசு கோரிக்கை விடுத்து வருகிறது” என்று அவர் கூறினார்.
இணையதளங்களில்....
நீதிமன்ற இணையதளங்களில் உள்ள தகவல்களின்படி, (டிசம்பர் 11, 2021 நிலவரப்படி) உச்சநீதிமன்றத்தில் 436 மூத்த வழக்குரைஞர்கள், 3,041 வழக்குரைஞர்கள் பதிவு செய்யப் பட்டுள்ள தாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்தார். மேலும், உயர் நீதிமன்றங்களில் சுமார் 1,306 மூத்த வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். நியமிக்கப்பட்ட மூத்த வழக் குரைஞர்களின் எஸ்சி, எஸ்டி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த குறிப்பிட்ட விவரங்கள் எதுவும் பராம ரிக்கப்படவில்லை எனவும் கூறினார்.எஸ்சி,எஸ்டி நீதிபதிகள் நியமனம் குறித்து ஒன்றிய அரசு நாடாளுமன் றத்தில் பல்வேறு கருத்துகள் கூறினா லும், மார்ச் 16, 2023 நில வரப்படி கொலீஜியம் 124 பெயர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத் துள்ளது. அவை ஒன்றிய அரசு மற்றும் உச்ச நீதி மன்ற கொலீ ஜியத்தின் பரிசீலனையில் உள்ளன. இதில், நான்கு பேர் மட்டுமே எஸ்சி பிரிவையும், மூன்று பேர் மட்டுமே எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment