பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு 25,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 31, 2023

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு 25,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை

சென்னை, மார்ச் 31- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செய்முறை தேர்வில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. இவர்களை கண்டறிந்து தேர்வில் பங்கேற்கச் செய்வதற்கான பணிகளை பள்ளிக்கல்வி துறை முடுக்கிவிட்டுள்ளது.

இதில் சுணக்கம் காட்டும் தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2ஆம் வகுப்புகளுக் கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்வை சுமார் 16 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தொடர்ந்து 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை எழுத 9.38 லட்சம் மாணவ, மாணவி கள் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பொதுத்தேர்வு எழுத உள்ள 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறி வியல் பாட செய்முறை தேர்வு அந்தந்த பள்ளிகளில் மார்ச் 20 முதல் 28ஆம் தேதி வரை நடத்தி முடிக்கவேண்டும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது செய்முறை தேர்வுக்கான அவ காசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதி காரிகளிடம் கேட்ட போது, ‘‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவ தற்காக பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்செய்முறை தேர்வில் பங்கேற்கவில்லை.

இவர்கள் இடைநின்ற மாணவர்களாக இருப்பதால், செய்முறை தேர்வுக்கான அவகாசம் தற்போது நீட்டிக்கப் பட்டுள்ளது. செய்முறை தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பொதுத்தேர்வில் பங்கேற்க வைப்ப தற்கான துரித நடவடிக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியர் கள் முன்னெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

No comments:

Post a Comment