25 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் - புதிய புத்தகங்கள் : தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 29, 2023

25 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் - புதிய புத்தகங்கள் : தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, மார்ச் 29- தமிழ்நாட்டிலுள்ள 25 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளுக்கு வாங்கப்பட வேண்டிய நூல்கள் அடங்கிய பட்டியல் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக புதிய புத்தகங்கள் ஏதும் வழங்கப் படாத நிலையில், தமிழ்நாடு அரசு இந்த உத்த ரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், ராணிப் பேட்டை, மதுரை, திரு வள்ளூர், திருவாரூர், தேனி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தருமபுரி, சென்னை, கரூர், ஈரோடு, தூத்துக் குடி, திருநெல்வேலி ஆகிய  17 மாவட்டங்களில் 25 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் நூல கங்கள் அமைப்பதற்கு ஏற்கெனவே ரூ.39.25 லட் சம் தொகை பகிர்ந்தளிக் கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நூலகங்களில் வாங்கிப் பயன் படுத்தப்பட வேண்டிய புத்தகங்களின் பட்டியல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலருக்கு அனுப்பி  வைக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து 17 மாவட்டங்களைச் சேர்ந்த நல அலுவலர்க ளுக்கு, ஆதிதிராவி டர் நல இயக்குநர் த.ஆனந்த் அனுப்பியுள்ள கடிதம்:

ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் அமைக்கப்ப டவுள்ளன. இந்த நூலகங் களுக்குத் தேவையான நூல்களைத் தேர்வு செய் யக் குழு ஒன்று அமைக்கப் பட்டது. தமிழ் இலக்கி யம், திராவிடம், மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு, உயர்கல்வி, சமு தாய கூட்டமைப்பு, சமூக நலன், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பொருளாதாரம், மருத்துவம், ஆராய்ச்சி நூல்கள்,போட்டித் தேர்வுக்கான நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் போன்ற தலைப்புகளில் நூல்கள் தேர்வு செய் யப்பட்டன. மேலும், ஆளுமைத் திறன், கல்வி, மொழி, திறன் மேம் பாடு தொடர்புடைய நூல்களை வாங்கி வழங் கவும் குழு சார்பில் அறி வுறுத்தப்பட்டது.

ஒன்றிய அரசுப் பணித் தேர்வுக்கு முக்கி யத்துவம் அளிக்கும் வகையில் நூல்கள் பரிந்துரை செய்யப்பட் டுள்ளன. குறிப்பாக, ரயில்வே வாரியத் தேர்வை ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாண வர்கள் எழுதும் வகை யில், ஏழுக்கும் மேற்பட்ட தலைப் பிலான நூல்கள் பரிந்துரைக்கப்பட்டுள் ளன. இதேபோன்று, அரசுப் பணியாளர் தேர் வாணையத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், ஆறு வெவ்வே றான தலைப்புகளில் நூல்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. மொத்த மாக, 360-க்கும் அதிக மான நூல்கள் அடங்கிய தலைப்புகள் பட்டியலி டப்பட்டுள் ளன. இந்தப் பட்டியலில் உள்ள நூல் களை தேவைக்கேற்ப கொள்முதல் செய்து விடுதி  மாணவர்களுக்காக ஏற்படுத்தவிருக்கும் நூல கங்க ளில் பயன்ப டுத்திக் கொள்ளலாம் என்று அந் தக் கடிதத்தில் ஆதிதிரா விட நல இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment