2021-2022 நிதி ஆண்டில் கட்சிகளுக்கு கிடைத்த வருமானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 2, 2023

2021-2022 நிதி ஆண்டில் கட்சிகளுக்கு கிடைத்த வருமானம்

புதுடில்லி, மார்ச் 2 2021-2022 நிதி ஆண்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வருமானம் ரூ.1,912 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.   நமது நாட்டில் மொத்தம் 8 அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளாக தேர்தல் ஆணையத் தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. அவை, பா.ஜ.க., காங் கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகும். இந்தக் கட்சிகள் 2021-2022ஆம் ஆண்டில் தங்களது வருமானம் எவ்வளவு என்கிற விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளன. இது குறித்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங் களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- 

« அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய அரசியல் கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.3,289.34 கோடி ஆகும். 

« மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் வருமானம் மட்டுமே ரூ.1917.12 கோடி. 8  தேசிய கட்சிகளின் மொத்த வருமானத் தில் இது பாதிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகையில் ரூ.854.46 கோடி செலவிடப்பட்டுள்ளதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. 

« காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.541.27 கோடி ஆகும். செலவு ரூ.400.41 கோடி ஆகும். வருமானத்தில் 73.98 சதவீதத்தை காங்கிரஸ் கட்சி செலவு செய்துள்ளது. 

« திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ.545.74 கோடி ஆகும். இந்தக் கட்சி செலவு செய்துள்ள தொகை ரூ. 268.33 கோடி. 

« எட்டு அரசியல் கட்சிகள் மொத்த வருமானத்தில் 55.09 சதவீதம், அதாவது ரூ.1,811.94 கோடி, தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த நன்கொடை ஆகும். 

« தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு ரூ.1,033.70 கோடியும், திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.528.13 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.236.09 கோடியும், தேசியவாத காங்கி ரசுக்கு ரூ.14 கோடியும் கிடைத்துள்ளது. 

« பிற நன்கொடை வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு கிடைத் துள்ள நன்கொடை என பார்த்தால், பா.ஜ.க.வுக்கு ரூ.1,775.43 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.582.52 கோடியும், காங்கிரசுக்கு ரூ.347.99 கோடியும், தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.71.95 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ரூ.65.87 கோடியும் கிடைத்துள்ளன.

No comments:

Post a Comment