தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சாலை விபத்தில் 17 ஆயிரம் பேர் மரணம் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சாலை விபத்தில் 17 ஆயிரம் பேர் மரணம் : அமைச்சர் மா. சுப்பிரமணியன்


சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் மரணம் அடைவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்தியாவிலேயே முன்மாதிரி யான திட்டமாக 'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆ-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். 

இந்த நிலையில், இந்த திட்டத்தின் 1 லட்சத்து 50 ஆயிரமாவது பய னாளியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், பூந்தமல்லி பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித் தார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களி டம் கூறியதாவது:- 

இந்த மகத்தான திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் விபத்துகள் அதிகமாக நடக்கும் 500 இடங்கள் கண்டறியப் பட்டது. இந்த இடங்களை சுற்றியுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகள் என்று 683 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டு திட்டம் செயல் படுத்தப்பட்டு உள்ளது. விபத்து ஏற் பட்ட உடன் விபத்துக்கு ஆளானவர் களை இந்த மருத்துவமனைகளில் சேர்த்தால் முதல் 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1 லட்சம் வரை செலவிடப்பட்டு அவர்களின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

இந்தியா முழுவதும் ஆண்டொன் றுக்கு சாலை விபத்தால் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் மரணம் அடைகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்டு தோறும் 17 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் மரணம் அடையும் சூழல் நிலவுகிறது. இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு விபத்துகளை நேரில் பார்ப்பவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்கும் எண்ணம் இருந்தாலும் காவல்துறை விசாரணைக்கு வர வேண் டும் என்று நினைத்து முன்வராமல் இருந்தார்கள். இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்துகளில் சிக்கு வோரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தால் ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் பயனளித்து வருகிறது. பாகுபாடு இல்லாமல் பனிமலர் மருத்துவக்கல்லூரி மருத்தவமனையில் இதுவரை 326 பேருக்கு ரூ.22 லட்சத்து 46 ஆயிரம் தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் விபத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 107 ஆக பதி வாகியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் இந்த திட்டம் நல்ல பலனை தந்துள்ளது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு கடந்த 15 மாதங்களில் ரூ.132 கோடியே 52 லட்சம் செலவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி சட்டமன்ற உறுப்பினர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ், பனிமலர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை தலைவர் சின்னதுரை, இயக்குநர் சக்திகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment