ஈரோடு, மார்ச் 5- பிளஸ்2 தேர்வு 13ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு விடைத் தாள்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பிளஸ்-2 பொதுத் தேர்வு 13ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு விடைத்தாள்கள் தயார் செய்யும் பணி தீவிரம் அடைந்து உள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
இதை முன்னிட்டு மாணவ-மாணவிகள் தேர்வு எழுதும் விடைத்தாள்கள் தயார் செய்யும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கான விடைத்தாள்களில் முகப்பு தாள்கள் இணைக்கும் பணி ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது.
தையல் எந்திரம் மூலம் முகப்பு தாள்கள் தைத்து தயார் செய்யப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு முன்பு விடைத்தாள்கள் பணி முடிக்கப்பட்டு காப்பு அறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment