தமிழ்நாட்டின் வணிகவரி வருவாய் ரூ.1.17 லட்சம் கோடி அமைச்சர் பி. மூர்த்தி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

தமிழ்நாட்டின் வணிகவரி வருவாய் ரூ.1.17 லட்சம் கோடி அமைச்சர் பி. மூர்த்தி தகவல்

சென்னை, மார்ச் 4 தமிழ்நாடு அரசின் வணிகவரித் துறை வருவாய் 1.17 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகவரித் துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாக வணிகவரி வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வணிகவரித் துறையில் நடப்பு நிதியாண்டில் 28.2.2023 வரையிலான மொத்த வருவாய் 1,17,458.96 கோடி ரூபாய் ஆகும்.கடந்த ஆண்டின் இதே நாளில் இத்துறையின் வருவாய் 92,931.57 கோடி ரூபாயாக இருந் தது. இவ்வகையில் கடந்த ஆண் டுடன் ஒப்பிடுகை யில் நடப்பு ஆண் டில் இதே நாளில் 24,527.39 கோடி ரூபாயை வரு வாயை வணிக வரித்துறை அதிகமாக ஈட்டியுள் ளது. அதே போன்று பதிவுத்துறையில் ஆவ ணங்கள் பதிவின் மூலம் பெறப்படும் வருவாய் நடப்பு ஆண்டில் வரலாற்று சாதனையை எட்டியுள்ளது. நடப் பாண்டில் 28.2.2023 வரை பதிவுத் துறையில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 15,684.83 கோடி ரூபாய் ஆகும். கடந்த வருடம் இதே நாளில் வசூலிக் கப்பட்ட மொத்த வருவாய் 12,161.51 கோடி ரூபாயை விட 3,523.32 கோடி ரூபாய் அதிகமாக நடப்பு ஆண்டில் பதி வுத்துறையால் வசூலிக்கப்பட் டுள்ளது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வுக் கூட்டங்களினாலும் இத்துறை களின் வருவாய் அதிகரித்து வந்துள்ளது என அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment