சென்னை, மார்ச் 3 டாவோ நிறுவனத்தின் புதிய மின் இயக்க இருசக்கர வாகனத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாவோ ஈவி டெக்கின் தலைவர் 2.3.2023 அன்று மைக்கேல் லியு புதிய வாகனங்களை அறிமுகம் செய்து, இந்தியாவில் விரிவாக்கம் செய்வதற்கான தங்களது நிறுவனத்தின் திட்டங்களை விவரித்தார்.
தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் எண்ணிக்கை உள்ளதால், இம்மாநிலம் இயற்கையாகவே மின்சார வாகனங்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. சிறந்த கலாச்சாரம் மற்றும் அதன் குடிமக்களின் தர்க்கரீதியான பகுப்பாய்வு காரணமாக டாவோ போன்று எந்த ஒரு எந்தவொரு தரமான தயாரிப்பு வழங்குநரும் இம்மாநில சந்தையில் நுழைய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த 2023ஆம் ஆண்டு நாங்கள் சந்தையில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட் டுள்ளோம். மேலும் அதில 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை புதிய தயாரிப்பு களின் வளர்ச்சிக்காக ஒதுக்க திட்டமிட் டுளோம். இந்த 100 மில்லியன் டாலர் முதலீட்டில் குறிப்பாக தமிழ் நாட்டிற்கு ருபாய் 100 கோடியை ஒதுக்க திட்டமிட்டுளோம். எங்கள் விரிவாக்க உத்தி மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment