55 ஆண்டுகள் அரசியலையே எனது வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறேன்!
மார்ச் 1, என்னுடைய 70ஆவது பிறந்தநாள்!
இதில் சுமார் 55 ஆண்டுகாலம் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் எனது குடும்பமாக நினைத்து, மிக மிக இளமைக் காலத்திலேயே அரசியலுக்கு வந்தேன். 'அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?' என்று கேட்டபோது, 'அரசியலில்தான் நிச்சயம் நான் இருந்திருப்பேன்' என்று பதில் சொன்னவன் நான்.
இலக்கை அடைய எந்நாளும் உழைப்பேன்! அரசியல் என்பதை அதிகாரம், என்பதாக இல்லாமல். அதனைக் கடமையாகவும், தொண்டாகவும், சேவையாகவும் நினைக்க வைத்தவர்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும் இனமானப் பேராசிரியர் அவர்களும்!
இவர்களது வழித்தடத்தில் வந்திருக்கக் கூடிய நான், கிடைக்கின்ற பொறுப்புகளின் மூலமாக மக்களுக்குச் சேவையாற்றும் இலக்குகளை எல்லாக் காலத்திலும் எனக்கு நானே வைத்துக் கொள்கிறேன். எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை. எனக்கு நானே இலக்கு வைத்துக் கொள்கிறேன். அந்த இலக்கை அடையவே எந்நாளும் உழைக்கிறேன்.
‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்பதுதான் பொதுவான இலக்கு!
அதனால்தான் மக்கள் பயன்பெறக்கூடிய எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து துவக்கி வைக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் 'தினந்தோறும் திட்டங்கள்' என்பதுதான் என் திட்டம்! அதாவது, தினந்தோறும் திட்டங்களைத் தீட்டுவதுதான் என்னுடைய பணி!
அந்த வகையில், இந்த விழாவில் மிக முக்கியமான ஏழு திட்டங்களைத் தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன்.
("ஏற்றமிகு ஏழு திட்டங்கள்” தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்)
No comments:
Post a Comment