சென்னை, பிப். 28- பாஜகவினர் திட்டமிட்டு தமிழ்நாட்டில் வன்முறையை தூண்ட முயற்சி செய்கின் றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். காவல்துறை தலைமை இயக்குநரை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசுக்கு எதிரான தொடர் நடவடிக் கைகளில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு நெருக்கடியை தர வேண்டும் சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும். அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று பாஜக குறி வைத்து வேலை செய்வதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரை சந்தித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக சில தகவல் களை பகிர்ந்து கொண்டேன்.
தமிழ்நாட்டில் வன்முறையை தூண் டும் வகையில் பாஜகவினர் திட்டமிட்டு பொது வெளியில் பொது மேடையில் பேசி வருகின் றனர். சமூக வலைத் தளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பாஜகவினர் கருத்துக்களை பதி விட்டு வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் பேசியது வன்முறையை தூண்டும் வகையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் ஒருவர் குண்டு வீசுவோம், துப்பாக் கியால் சுடுவோம் என்று பேசியிருப்பது வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. அதை தமிழ்நாடு பாஜக தலைவர் வெளிப்படையாக ஊக்கப்படுத்தும் வகை யில் பேசுகிறார்.இதை எல்லாம் பார்க்கும் போது பாஜகவினர் திட்டமிட்டு தமிழ் நாட்டில் வன்முறையை தூண்ட முயற்சி செய்கின்றனர்.
தமிழ்நாடு அரசுக்கு எதிரான தொடர் நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு நெருக்கடியை தர வேண்டும் சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும். அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று பாஜக குறி வைத்து வேலை செய்கிறது.
வட மாநிலங்களில் இப்படித் தான் பாஜகவினர் வெறுப்பு பேச்சின் மூலம் வெறுப்பு பிரச்சாரங்களின் மூலம் வன்முறையை தூண்டி, ஆதாயம் தேடி வருகின்றனர்.
வடமாநிலங்களில் பின்பற்றக்கூடிய அதே உத்திகளை தமிழ்நாட்டிலும் நடைமுறைப் படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பல் திட்ட மிட்டு செயல்பட்டு வரு கிறது. அந்த அடிப்படையில்தான் திருவள்ளுவருக்கு காவி உடை போர்த் துவது, பெரியாருக்கு காவிச் சாயம் பூசுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து திருநீறு பூசி அவமதிப்பது போன்ற காரியங் களை பாஜகவினர் செய்து வருகின்றனர்.
சமூக நீதிப் பயணம் மேற்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாகனத்தை மறித்து வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.
இப்படி மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வினர், ஹிந்து முன்னணி அமைப்பினர் பதற் றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரின் பார்வைக்கு கொண்டு சென்றோம் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
No comments:
Post a Comment