சமூக நீதி பரப்புரை, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் அரிய சாதனைகள்பற்றியும், தமிழ்நாட்டு இளைஞர்கள் மேம்பாடு, பொருளாதாரச் செழிப்பு உட்பட பலவகையில் பயன் படக்கூடிய, சேது கால்வாய்த் திட்டம் என்ற தமிழன் கால்வாய்த் திட்டப் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. ‘இராமன் பாலம்' என்ற ஒரு கற்பனையைக் காட்டி பல ஆண்டுகளுக்கு முன்னே முடிந்திருக்க வேண்டிய அத்திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கி முடிக்கப்பட வேண்டும் - என்ற பல முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய தமிழ், தமிழ்நாடு மேம்பாட்டை மய்யப்படுத்திய 40 நாள் பெரும் பயணப் பரப்புரையின் முதல் கட்டம் 3.2.2023 அன்று ஈரோட்டில் அறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டியும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத் தொடக்கம் போலவும் சிறப்பாகத் தொடங்கியது. நேற்று முன்தினம் (10.2.2023) சென்னை புறநகர் - தாம்பரம் கழக மாவட்டம் பல்லாவரத்தில் நடைபெற்ற பரப்புரையோடு 15 கூட்டங்கள் - மிக வெற்றிகரமாக நிறைவடைந்தன.
பல்லாயிரக்கணக்கில் மக்கள் பெருந்திரள் மாட்சியோடு கொங்கு மண்டலத்தில் தொடங்கி, அப்பயணம் தொண்டை மண்டலத்தில் (முதல் கட்டம்) வெற்றிகரமாக பலதரப்பட்ட மக்களும், அமைப்புகளின் முன்னணியினரும் நேரில் சந்தித்தும், பரப்புரைக் கூட்டங்களில் பேசியும், ஆதரவுக் கரம் நீட்டினர்.
13 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட பரப்புரை தொடங்கவுள்ளது!
பெரிதும் கடுமையாக உழைத்துப் பிரச்சாரத் தொடர் மழைக்கு உற்சாகத்துடன் பாடுபட்டு, தோழமைக் கட்சிகளை அரவணைத்துள்ள அனைவருக்கும், பரப்புரைபற்றிய செய்திகளை வெளியிட்ட செய்தி ஊடகங்களுக்கும் எங்கள் இதயங்கனிந்த நன்றி!
பயணங்கள் முடிவதில்லை!
நமது லட்சியப் பயணங்கள் தோற்பதில்லை!
உதாரணம், காதலர் தினத்தன்று பசு அரவணைப்பை வலியுறுத்திய ஒன்றிய அரசு, பிறகு அதனைக் கைவிட்டது!
கி.வீரமணி தலைவர்,
12.2.2023 திராவிடர் கழகம்
No comments:
Post a Comment