பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்தாளுநர் போட்டித் தேர்வு இலவச பயிற்சி நிறைவு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 12, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்தாளுநர் போட்டித் தேர்வு இலவச பயிற்சி நிறைவு விழா

 

திருச்சி, பிப். 12- மருத்துவப் பணிகளுக்கான தேர்வாணையம் 889 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட் டது. அதற்கான நேரடி இலவச பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு  மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தின் சார்பில் பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொடர்ந்து 01.11.2022 முதல் 31.01.2023 வரை மூன்று மாதங்கள் நடைபெற்றன. 

இப்பயிற்சிக்கான நிறைவு விழா 31.01.2023 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மருந்தாளுநர் திருமதி டெய்சி ராணி வரவேற்புரையாற்றினார். 

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தின் உதவி இயக்குநர் கலைச்செல்வம் தமது சிறப்புரையில் "மற்ற துறைகளில் நடத்தக்கூடிய போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளக்கூடிய போட்டியாளர்கள் துவக்கத்தில் அதிகமாகவும் பிறகு குறைந்த அளவே அவர்களது பங்களிப்பு இருக்கும். ஆனால் பெரியார் மருந்தியல் கல்லூரியில் நடை பெற்ற மருந்தாளுநர்களுக்கான இச்சிறப்பு பயிற்சி வகுப்பில் முதல் நாளில் கலந்து கொண்ட வர்கள் தொடர்ந்து நிறைவு நாள் வரையிலும் பங்கு கொண்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது. 

வழிகாட்டல்கள் சிறப்பு 

பயிற்சிக்குத் தேவையான அத்துணை வசதிகளையும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கும் பயிற்சியாளர்களுக்கும் சிறந்த முறையில் செய்து கொடுத்த பெரியார் மருந்தியல் கல்லூரியும் அதன் நிர்வாகமும் தான் மிக முக்கிய காரணமாகும் என்று உரையாற்றினார். 

மேலும் முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் வழிகாட் டல்கள், அருமையான நூலக வசதி இவைகள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது. இந்நேரத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தின் சார்பில் பெரியார் மருந்தியல் கல்லூரி நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். பயிற்சியாளர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற அனைத்து அறிவுசார் ஆக்கங்களையும் தங்களது தேர்வில் வெளிக் கொணர்ந்து வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கும் பயிற்சி அளித்த பெரியார் மருந்தியல் கல்லூரிக்கும் சிறப்பை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

சமூகநீதி நிலைநாட்டப்பட்டதால் தான்

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்கள் தமது தலைமையுரையில்: சமுதாயத் தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி "அனைவருக்கும் அனைத்தும்" என்பது தான் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கற்பித்த சமூகநீதி. அத்தகைய சமூகநீதி நிலைநாட்டப்பட்டதால்தான் இன்று கல்வி, வேலைவாய்ப்பு அனைத்திலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு நம்மவர்களும் அரசுப்பணிகளில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பயன்பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞூர்கள் அதிக அளவில் அரசுத்துறைகளில் பங்கேற்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுபவர்தான் இந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள். அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் பெரியார் மருந்தியல் கல்லூரி இத்தகைய பயிற்சி வகுப்பினை மேற்கொண்டதில்  மன நிறைவு பெறுகின்றது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட  மருந்தாளுநர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பெரியார் மருந்தியல் கல்லூரிக்கும் பேராசிரியர்களுக்கும் பெருமை சேர்ப்பதே உண்மையான மனநிறைவு என்று உரையாற்றி அனைவருக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 

மருந்தாளுநர்களுக்கு அதிக பணி வாய்ப்புகள்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு கலைச்செல்வன் அவர்கள் தமது வாழ்த்துரையில் மருந்தாளுநர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் பணி வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவும் மருந்தாளுநர் போட்டித் தேர்வுகளில் தொடர்ந்து வேலைவாய்ப்பு அலுவலகம் தனிகவனம் செலுத்தும் என்றும் உரையாற்றினார்.  

அதனைத் தொடர்ந்து தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் ச. இரபேல் மற்றும் பயிற்சி அளித்த பேராசிரியப் பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினர்.  

இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர்  அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக மருந்தாளுநர் எஸ். இராமச்சந்திரன் நன்றியுரையாற்றினார். 

முன்னதாக மருந்தாளுநர்கள் எஸ். கோபாலகிருஷ்ணன், ரேவதி, நாகராஜன் ஆகியோர் தங்களது அணிந்துரையில் மருந்தாளுநர்களுக்கான பயிற்சி வகுப்பினை நடத்துவதற்கு அனுமதி அளித்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மிகச்சிறப்பான முறையில் செய்து கொடுத்த பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர்  முனைவர் இரா. செந்தாமரை, பயிற்சி அளித்த பேராசிரியப் பெருமக்கள் மற்றும் நிர்வாகத் திற்கு அனைவரின் சார்பாக எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்களது நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில்  மருந்தாளுநர் பயிற்சி வகுப்பினை சிறப்பான முறையில் திருச்சி மாவட்டத்தில் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மய்யத்தின் மண்டல இணை இயக்குநர் சந்திரன் மற்றும் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மய்யத்தின் இணை இயக்குநர் மகாராணி ஆகியோருக்கு நிர்வாகத்தின் சார்பிலும் முதல்வர் மற்றும் பயிற்சி மருந்தாளுநர்கள் சார்பிலும் நன்றி நன்றி பாராட்டப்பட்டது.

No comments:

Post a Comment