வடகுத்து, பிப். 22- தமிழுக்கு முதன்மை வேண்டி கன்னியாகுமரி முதல் சென்னை வரை பரப்புரை ஊர்தி பயணம் மேற்கொண்டுள்ள பன் னாட்டு தமிழ் உறவு மன்ற நிறு வனர் வா.மு.சேதுராமன் அவர்க ளுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் உலக தாய் மொழிநாள் கருத்தரங்கமும் 19 2 2023 ஞாயிறு மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் உலக தமிழ் கழகம் நிர்வாகி சுப்பையா தலைமையில் நடைபெற்றது.
வி.திராவிடன் வரவேற்புரை ஆற்றினார். நெய்வேலி தமிழ் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், கவிஞர் தேன் தமிழன், மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணி வேல் ஆகியோர் முன்னிலை வகித் தனர். சி.தர்மலிங்கம், கோ.வேலு, இரா.மாணிக்கவேல், ஆடூர் தமி ழேந்தி, திராவிட மணி, பெரியார் செல்வம், உதய சங்கர், புலவர் ராவணன், மண்டல செயலாளர் நா.தாமோதரன், கோ.இந்திரஜித், குணசேகரன், திருநாவுக்கரசு, தங்க.பாஸ்கர், தீபக், தமிழ்ச்செல்வன், டிஜிட்டல் ராமநாதன் ஆகியோர் பேசினர்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை ஆற்றினார். பெருங் கவிகோ வா.மு. சேதுராமன் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை ஆற்றினார். தமிழர் தலைவரின் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணத்திற்கு வாழ்த்து கூறினார். முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment