பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலகத் தாய்மொழி தினம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலகத் தாய்மொழி தினம்

வல்லம், பிப். 25- தமிழ் மன்றம் நடத்திய உலகத் தாய்மொழி தினம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தில் உள்ள மேரிகியூரி அரங்கில் 21.2.2023 அன்று காலை 10.30 மணிக்கு துணைவேந்தர் செ.வேலு சாமி தலைமையில் நடைபெற்றது. 

இதில் அவர் பேசுகையில், தமிழ் மொழி உலகம் தழுவிய பண்பாடுகள் கொண்டது, மாண வர்கள் முகநூல், புலனம் இவை களில் நல்ல தமிழைத் தட்டச்சு செய்து பயன் பெறுவது நலம் பயக்கும். 

நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வது அவசியம், தஞ்சை கோபுரம் கூட உயிர் எழுத்துகளைக் கொண்டு வடி வமைக்கப்பட்டுள்ளது என்றார்.

 மேலும், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் முனைவர் ஜே.இராம தாஸ் கிரேக்க தத்துவங்கள், லத்தீன் சட்டம், தொல்காப்பியம், திருக் குறள் சிறப்புகளை விளக்கினார். தமிழ் எங்கள் உயிர் மூத்தமொழி, எதுகை மோனை களைக் கொண்ட தன்மானமிக்க சமூக உலைக் களத் தில் பெரியார் சிந்தனை எழுத்தியல் மாற்றம் குறித்து பேசினார். 

சொல்லின் உயர்வு தரு சொல்லே சங்க இலக்கிய நற்றிணை பாடல்கள், எட்டுத்தொகை நூல்கள், மேற்கோள்கள் பற்றி விளக்கினார். மொழிக்காக 70 பேர் உயிர் இழந்துள்ளனர். 

முதலாம் ஆதித்த சோழனின் தமிழ்ப்பணிகள், சீனர்களின் மொழி உணர்வைப் போல தமி ழர்கள் மொழி உணர்வைப் பெற வேண்டும் என்றார்.

மேலும், கவிதை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டன. இவ்விழாவில் இயக் குநர் எஸ்.பி.கே.பாபு வரவேற்புரை ஆற்றினார். 

பதிவாளர் பி.கே.சிறீவித்யா வாழ்த்துரை வழங்கினார். தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனை வர் ந.லெனின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் பெற்றனர்.


No comments:

Post a Comment