தஞ்சாவூர், பிப்.12- மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டண சலுகையை திரும்ப வழங்கி, அவர்களின் அனைத்து மருத்துவ செலவுகளை ஒன்றிய அரசே ஏற்க முன்வர வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற்சங்க தலைவர்களின் கூட்ட மைப்பு (AFCCOM) வலியுறுத்தி உள்ளது.
இக்கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் 5.2.2023 அன்று தஞ்சாவூர் நீதி நகர் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சரோஜ் நினைவகத்தில் இக்கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் தலைமையில் நடைபெற்றது.
இதன் துணைத் தலைவர் டி.வி.சந்திரசேகரன், மூத்த தலைவர்கள் மதுரை எம்.முருகையா, திருச்சி என்.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட் டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இந்திய ஸ்டேட் வங்கியின் ஓய்வூதியர்கள் மற்றும் ஊழியர்களின் உடல் நலம் காக்க நிறுவப்பட்ட வங்கி மருந்தகங்கள் முறைப்படி செயல்படுத்தப்படாதது வேதனை அளிப்பதையும், தமிழ்நாட்டின் 38 மாவட் டங்களில் புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் வங்கி மருந்தகங்களை ஸ்டேட் வங்கி முன்வர வேண் டும். புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் இயங்கி வரும் மருந்தகங்களில் தகுதி பெற்ற மருத்துவர்களையும், செவிலியர்களையும் நிரந்தரமாக நியமித்து, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும், பென் இன்சுலின் உள்ளிட்டவற்றையும் வழங்க தாமதமின்றி வங்கி முன்வர வேண்டும்.
மூத்த குடிமக்களின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் ஒன்றிய அரசே ஏற்க முன்வர வேண்டும், கரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணக் கட்டண சலுகையை திரும்ப வழங்க ஒன்றிய அரசு உடனே முன்வர வேண்டும் என இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிருவாகக் குழுக் கூட்டத்தில் இவ்வங்கி ஊழியர் சங்கத்தின் மேனாள் பொதுச் செயலாளர் டி.சிங்காரவேலு,. திருச்சி எம்.சந்திரா கில்பர்ட், திருவாரூர் என்.பாண்டுரங்கன், தஞ்சாவூர் வீ.பூமிநாதன், வேலூர் ஆர்.லோகநாதன், செய்தி தொடர்பாளர் எம்.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உரத்தநாடு மேனாள் கிளைச் செயலாளர் வி.சம்பத் நிருவாகக் குழு ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
No comments:
Post a Comment