சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை, பிப். 18- சென்னை மண்டல திராவிடர் கழக மக ளிரணி மற்றும் திராவிட மக ளிர் பாசறையின் கலந்துரையா டல் கூட்டம் 11.02.2023 (சனிக் கிழமை) அன்று பகல் 12.30 மணி அளவில் சென்னை வள் ளுவர் கோட்டம் கலைஞர் பூங் காவில் நடைபெற்றது. சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட தாம்பரம்,

வடசென்னை, தென் சென்னை, ஆவடி,  கும்மிடிப் பூண்டி ஆகிய மாவட்டங்க ளைச் சேர்ந்த மகளிர் தோழர் கள் பங்கேற்று சிறப்பித்தனர். 

அனைவரையும் வரவேற்று தலைமை உரையாற்றிய ச இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்) 30.01.2023 அன்று சென்னை பெரியார் திடலில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடை பெற்ற மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் இறைவி இறையன் (மண்டல மகளிரணி செயலாளர்),  த மரகதமணி (மண்டல மகளிர் பாசறை செயலாளர்) ஆகியோரை அறிமுகப்படுத்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார். மாநில கலந்துரையாடல் கூட் டத்தில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து மகளிருக்கும் நன்றி தெரிவித்ததுடன் இனி ஒவ் வொரு மாதமும் நடைபெற உள்ள மண்டல கலந்துரை யாடல் கூட்டங்களிலும் தவ றாமல் பங்கேற்குமாறு கேட் டுக் கொண்டார். மகளிருக்குப் பொது வெளியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டித்து குரலெழுப்ப, குறுகிய காலத்தி லும் பெருமளவில் ஒன்று சேர மகளிர் தோழர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 இறைவி அனைவரையும் வரவேற்று மகளிர் ஒன்றி ணைந்து சுற்றுலா செல்ல விரைவில் ஏற்பாடு செய்யப் படும் என்று கூறினார். இனி மாதந்தோறும் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டங்களி லும் அதிக அளவில் பங்கேற் குமாறு கேட்டுக் கொண்டார்.  மரகதமணி  கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழி காட்டுதல் படி செயல்படுவோம் என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து இயக்கத்திற்குப் புதிதாக வந்துள்ள தோழர்கள்  சசிமேகலா மற்றும்  இலக்கியா ஆகியோர் தங்களை அறிமுகம் செய்து கொண்டு தங்களின் பணிகளுக்கு இடையூறின்றி இனிவரும் கூட்டங்களிலும கலந்துக் கொண்டு செயல்படு வோம் என்று கூறினர். ஆவடி மாவட்ட மகளிரணி தோழர்  மெர்சி  மகளிர் நலனுக்கான ஆர்ப்பாட்டங்களில் மகளிர் அதிக அளவில் பங்கேற்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

வருகை தந்த மற்ற தோழர்கள் சிலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) இனி மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அன்று தவறாமல் சென்னை மண்டல மகளிரணி - மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தை நடத்துவது.

2) அடுத்த மாதம் (மார்ச்) அன்னை மணியம்மையார் பிறந்தநாள் நினைவு நாட்களை ஒட்டி மகளிர் கலந்துரையாடல் கூட்டத்தை பெரியார் திடலி லேயே நடத்துவது. அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாதாந்திர கூட்டங்களை விருப்பம் தெரிவிக்கும் மகளிர் இல்லங்களில் நடத்துவது.

3) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 'சமூகநீதி பாது காப்பு, திராவிட மாடல் விளக் கப்' பரப்புரை தொடர்பயணம் அன்னை மணியம்மையாரின் 104ஆவது பிறந்தநாளான மார்ச் 10ஆம் நாளன்று கட லூரில் நிறைவு பெறுவதை யொட்டி அந்நிகழ்ச்சியில் மக ளிர் அதிக அளவில் பங்கேற்பது.

4) தமிழர் தலைவர் ஆசிரி யர்  கேட்டுக் கொண்டதற்கி ணங்க இயக்க வெளியீடான 'பெரியார் பிஞ்சு' மாத இதழுக்கு அதிக அளவில் ஆண்டு சந்தாக் கள் வசூலித்து அளிப்பது.

இறுதியாக, தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் 'உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றங்களில்  நீதிபதி கள் நியமனத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து' வள்ளு வர் கோட்டம் அருகில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்தில் பெருமளவில் பங் கேற்று, அதனைத்  தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள பூங்காவில் நடைபெற்ற மகளிர் கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்ற மக ளிர் தோழர்கள் அனைவருக் கும் பொதுக்குழு உறுப்பினர் காப்பாளர்  வெற்றிச் செல்வி  நன்றி கூறினார்.

No comments:

Post a Comment