இந்த நாட்டை கோட்சே நாடாக மாற்ற பாஜக முயற்சி பீகார் துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

இந்த நாட்டை கோட்சே நாடாக மாற்ற பாஜக முயற்சி பீகார் துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு

பாட்னா, பிப்.18  கோட்சேக்களின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்று பீகார் துணை முதமைச்சர் குற்றச் சாட்டியுள்ளார். 

இங்கிலாந்தின் லண்டனை தலை மையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு ஆங்கில செய்தி நிறுவனம் பிபிசி. இந்த செய்தி நிறுவ னத்தின் கிளை இந்தியாவில் மும்பை, டில்லியில் உள்ளது. இதனிடையே, டில்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை கடந்த 14.2.2023 முதல் ஆய்வு செய்தது. 59 மணி நேரம் நடந்த ஆய்வு கடந்த 16.2.2022 அன்று நிறைவடைந்தது. இந்த ஆய்வில் பிபிசி நிறுவனம் முறையாக வருமான வரி கட்டவில்லை என்றும், லாபத்திற்கு சரியாக கணக்கு காட்டவில்லை என்றும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நிதிக்கு சரிவர வருமான வரி கட்ட வில்லை என்றும் வருமானவரித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, டில்லி, மும்பை பிபிசி செய்தி நிறுவ னத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதை எதிர்க்கட்சிகள் கண்டித்து வருகின் றன. இந்நிலையில், பீகார் துணை முதமைச்சர் தஜஸ்வி   பாட்னாவில் நேற்று (17.2.2023) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. பிபிசி-க்கு என்ன நடந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். குஜராத்தில் என்ன நடந்தது என்றும் அனைவருக் கும் தெரியும். இந்த நாட்டை நாதுராம் கோட்சேவின் நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது' என்றார்.


No comments:

Post a Comment