சென்னை, பிப். 2- சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில் 1980-1981இல் சேர்ந்த மாணவர்கள் டிசம்பர் 2022 நிலுவைத் தேர்வுகளை எழுத வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்வுகள் குறித்த விவரங்கள் தற்போது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது தொலைதூரக் கல்வியில் பட்டப் படிப்புகளை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. இன்றைக்கு ஏராள மானோர் பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தொலைநிலைக் கல்வியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (பிப்.01) 2022இல் நடைபெற்ற சென்னை பல்லைகழக தொலைநிலை கல்வியின் இளநிலை, முதுநிலை மற்றும் விஙிகி தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதனை தேர்வர்கள் http://www.ideunom.ac.in/ என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment