பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கு இல்லாத ஆட்சி இந்தியாவில் பொருளாதார நிபுணர் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 15, 2023

பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கு இல்லாத ஆட்சி இந்தியாவில் பொருளாதார நிபுணர் கருத்து

இந்தியா இன்னும் வளர்ந்துவரும் நாடுதான் உலகளவில் அதீத வறுமையும் கொடும் பசியிலும் உள்ளமிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். ஒரு குடியரசு நாடாக மாறி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்; இவ்வளவு பேர் வறுமையிலும் பசியிலும் வாடுவதின்மீது கவனம்  குவிக்கத் தவறி  விட்டோம். ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படைத் தேவை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதுதான் முதன்மை பணியாக இருத்தல் வேண்டும். இல்லையா? அது இனிமேலும் முதன்மையான இலக்கு இல்லை என்பதை நாம் வசதியாக மறந்து விட்டோம். பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அரசு அமைத்து செயல் படுவது என்பது ஜனநாயகத்தில் எழுதப்படாத விதி. அடித்தட்டு மக்களை அடிமையாக வைத்திருப் பதுவே அதன் இலக்கு.

- பொருளாதார நிபுணர் ஜெயந்தி கோஷ்

உலகமயமாக்கல், பன்னாட்டு நிதி, வளரும் நாடுகளில் வேலை வாய்ப்பு முறைகள், பாலினம் மற்றும் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பருப்பொருளியல் துறைத் தலைவர் நேரு பல்கலைக்கழகம் டில்லி  பொருளியல் துறை சிறப்பு விரிவுரையாளர் லிவர் பூல் மற்றும் டக்ஸாஸ் பல்கலைக்கழகம்.


No comments:

Post a Comment