செந்துறை, பிப். 22- நீட் தேர்வு எதிர்ப்பு போராளி குழுமூர் அனிதா மறைந்த போது தமிழர் தலைவர் அவர்களை வரவேற்க திட்டக்குடி கடைவீதியில் தேநீர் கடையில் தோழர்களுடன் நின்று கொண்டி ருந்த பொழுது கழகத் தோழர்கள் மீது சங்கி ஒருவன் காரை வேகமாக ஓட்டி வந்து மோதி விபத்தை ஏற் படுத்த முயற்சித்து அதனை தோழர் கள் தடுத்து நிறுத்தி மேற்படி சங்கியால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அதிமுக அடிமை அரசால் வழக்கு பதியப் பட்டு திட்டக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலை யில் நேற்று (20.2.2023) வழக்கு தள்ளுபடி செய்து கழகத் தோழர் கள் மற்றும் நேரடியாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக கொள்கை பரப்பு துணைச் செயலா ளர் ச.அ.பெருநற்கிள்ளி உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து 21.2.2023 அன்று காலை 11 மணியளவில் செந்துறையில் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா டாக்டர் அம் பேத்கர் ஆகியோர்களின் சிலைக ளுக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் மாலை அணிவிக்கப் பட்டது.
நிகழ்வில் மாவட்ட அமைப்பா ளர் ரத்தின. ராமச்சந்திரன் .மண் டல செயலாளர் மணிவண்ணன். மாநில இளைஞரணி துணை செயலாளர் சு.அறிவன், மண்டல இளைஞரணி செயலாளர் பொன். செந்தில்குமார். மாவட்ட தொழி லாளர் அணி தலைவர் தா மதி யழகன் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வே. இளவரசன் மாவட்ட விவசாய அணி தலைவர் ஆ இளவழகன் ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன் ஒன்றிய செயலாளர் இராசா.செல்வகுமார் சோக்கா சேகர் மு ரஜினிகாந்த் இல தமிழரசன் பாசே ரகுபதி திமு கவைச் சார்ந்த வடமலை வெங்க டேசன் தமிழ்மணி ஆசிரியர்கள் வெங்கடேசன் சந்திரன் நாரா யணன் ஆகியோர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர் மேலும் குழு மூர் அனிதா நூலகத்தில் அனிதா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட் டது.
No comments:
Post a Comment